அமெரிக்காவுடனான புதிய ஒப்பந்தம் -விவாதம் அவசியம்!
அமெரிக்காவுடனான மிலேனியம் சவால்கள் ஒப்பந்த்தின் உள்ளடக்கம் தொடர்பில் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தி, நாடாளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
மிலேனியம் செலன்ச கோர்பரேஷன் ஒப்பந்த்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளமை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் மிலேனியம் செலன்ச் கோப்ரேஷன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இந்த ஒப்பந்தத்தினை கைச்சாத்திடுவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவதற்கு இன்னும் இரண்டுவார காலம் மாத்திரம் உள்ள நிலையில் வெளிநாட்டு நிறுவனத்துடன் அரசாங்க் அவசரமாக முக்கிய ஒப்பந்தம் ஒன்றினை கைச்சாத்திடுவதற்கு பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இலங்கை அரசாங்கம் இவ்வாறான ஒப்பந்தங்களை ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரே கைச்சாத்திட வேண்டும்.
இந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் என்ன என்பது தொடர்பில் இதுவரையில் நாடாளுமன்றத்திற்கோ, நாட்டு மக்களுக்கோ அறிவிக்கப்படவில்லை. ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டு அவை நாடாளுமன்ற விவாதத்திற்கும் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.