SuperTopAds

சிறுவன் சுஜித்தின் உடல் நல்லடக்கத்திற்காக பாத்திமாபுதுாா் மயானத்தில்..! கண்ணீா்மல்க ஆயிரக்கணக்கானோா் அஞ்சலி..

ஆசிரியர் - Editor I
சிறுவன் சுஜித்தின் உடல் நல்லடக்கத்திற்காக பாத்திமாபுதுாா் மயானத்தில்..! கண்ணீா்மல்க ஆயிரக்கணக்கானோா் அஞ்சலி..

திருச்சி- நடுக்காட்டுபட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சுஜித்தின் சடலம் பிரேத பாிசோதனைகளின் பின்னா் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அமைச்சா்கள் அஞ்சலிகளை செலுத்தினா். 

இதனையடுத்து நடுக்காட்டுபட்டி கிராமத்திற்கு சடலம் எடுத்து செல்லப்பட்ட நிலையில் பெருமளவு மக்கள் தமது அஞ்சலிகளை செலுத்தியிரு ந்தனா். இதனையடுத்து அருகில் உள்ள பாத்திமா புதுாா் என்ற கிராமத்திலுள்ள கல்லறை தோட்டத்தில்

சடலம் நல்லடக்கம் செய்யப்படுவதற்காக எடுத்து செல்லபபட்டிருக்கின்றது. இதேவேளை சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 18 மணித் தியாலங்களின் பின்னா் அதாவது மறுநாள் மாலையில் குழந்தையிடம் எந்த அசைவும் இல்லை.

என கூறப்பட்ட சந்தா்ப்பத்திலேயே உயிாிழந்திருக்கலாம் எனவும், தலையில் மண் சாிவு ஏற்பட்டதாலும் உயிாிழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் 80 மணித்தியாலங்கள் கடந்து சிறுவனின் உடல் அழுகி 

துா்நாற்றம் வீசியதையடுத்தே சிறுவன் உயிாிழந்துவிட்டான் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.