தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் என கூறும் தைாியம் யாருக்கும் உள்ளதா..?

ஆசிரியர் - Editor I
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் என கூறும் தைாியம் யாருக்கும் உள்ளதா..?

இலங்கை சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் என கூறும் தைாியம் எவருக்கும் உண்டா? என கேள்வி எழுப்பியிருக்கும் ஜனாதிபதி வேட் பாளா் எம்.கே.சிவாஜிலிங்கம்,

சாதிக்க முடியாமல்போகலாம், ஆனால் சாதிக்க முயற்சி எடுத்தவனாக உயிரை விட வேண்டும். அதற்காகவே ஜனாதிபதி தோ்தலில் களமிறங்கியிருக்கின்றேன். எனவும் கூறியிருக்கின்றாா். 

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “நாடு முழுவதும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளேன்.

எனினும் பாதுகாப்பு பிரச்சினைகள் உள்ளன. தெற்கில் காலி, மாத்தறை பிரதேசங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படுமென நினைக்கின்றேன்.பாதுகாப்பு வழங்கப்பட்டால், 

காலி, மாத்தறை மாவட்டங்களில் செய்யலாம். கொழும்பு, மலையகம், வடகிழக்கு உள்ளிட்ட பிரதேசங்களில் எமக்கு கிடைக்கப்பெறும் வசதி வாய்ப்புக்களைப் பெற்றுக்கொண்டுதான், 

பிரசாரங்களில் ஈடுபடவேண்டியுள்ளது.சாதிக்க முடியாமல் போகலாம், சாதிக்க முயற்சி எடுத்தவர்களாக மக்கள் மத்தியில் செயற்பட்டவனாக உயிரை விடவேண்டும்.மேலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்த பின்னர், 

சிறையில் உள்ள இராணுவத்தினரை விடுதலை செய்யப்போவதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய கூறுகின்றார்.26 வருடங்களாக சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு 

கூறும் தைரியம் யாருக்காவது உள்ளதா?” என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு