பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக திருகோமலைக்கு சென்ற இளைஞனுக்கு நடந்த கதி..!

ஆசிரியர் - Editor I
பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக திருகோமலைக்கு சென்ற இளைஞனுக்கு நடந்த கதி..!

பிறந்தநாள் கொண்டாடுவதற்காக கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு சென்ற இளைஞன் ரயிலில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளாா். 

இச்சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.இவ்வாறு படுகாயமடைந்தவர் 

திருகோணமலை - இறக்கக்கண்டி பகுதியைச் சேர்ந்த முகம்மது முபீஸ் (21வயது) எனவும் தெரியவருகின்றது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றிக் கொண்டிருந்த இவர் இன்று தனது 21 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுவதற்காக 

அவரது சகோதரர்கள் அவரை வீட்டுக்கு வருமாறு அழைத்த போது அவர் நேற்றிரவு கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு சென்றதாகவும் 

இன்று அதிகாலை ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. குறித்த இளைஞர் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் 

சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு