SuperTopAds

கிளிநொச்சி பிறீமியா் லீக் கிாிக்கெட் போட்டிகள் ஆரம்பம்..! இயக்குனா்கள் பாரதிராஜா, அமீா் தொடக்கிவைத்தனா்..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி பிறீமியா் லீக் கிாிக்கெட் போட்டிகள் ஆரம்பம்..! இயக்குனா்கள் பாரதிராஜா, அமீா் தொடக்கிவைத்தனா்..

கிளிநொச்சியில் பதிவு செய்யப்பட்ட கழகங்களிற்கிடையிலான கடினப்பந்து போட்டிகள் நான்கு வருடமாக இடம்பெற்று வருகின்றது. 2019ம் ஆண்டுக்கான குறித்த போட்டிகள் இன்று கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது. 

குறித்த போட்டியில் 12 கழக அணிகள் மோதுகின்றன. இன்று குறித்த போட்டியின் ஆரம்ப நிகழ்வும், கிண்ண அறிமுகமும் இடம்பெற்றது. காலை 11 மணியளவில் குறித்த போட்டியின் ஆரம்ப நிகழ்வில் தென்னிந்திய இயக்குனர் இயக்குனர் இமயம் பாரதிராஜா, 

இயக்குனர் அமீர், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சி.சிறிதரன், கரைச்சி பிரதேச சபை தவிசாளர்,  லண்டன் கற்பக விநாயகர் ஆலயம் மற்றம் அகிலன் பவுண்டேசன் ஸ்தாபகர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பான்ட் வாத்திய அணிவகுப்புடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து மங்கள விளக்கேற்றப்பட்டது.. தொடர்ந்து தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன், துடுப்பாட்ட சம்மேளன கொடிகள் மற்றம் கழகங்களின் கொடிகளும் ஏற்றப்பட்டன. 

தொடர்ந்து வருகை தந்த விருந்தினர்களால் குறித்த புாட்டிக்கான கிண்ணம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து வருகை தந்த விருந்தினர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

தொடந்து நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குனர் அமீர் ஆகியுார் உரையாற்றினர். தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் அறிமுகம் இடம்பெற்றதுடன், 

கழக வீரர்கள் விருந்தினருடன் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டனர். குறித்த போட்டிகள் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இடம்பெறும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த போட்டிக்கான நிதி அனுசரணையினை 

லண்டன் கற்பக விநாயகர் ஆலயம் மற்றம் அகிலன் பவுண்டேசன் அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடதக்கதாகும்.