இலங்கை அணிக்கு பாகிஸ்த்தானில் உச்ச பாதுகாப்பு..! கஷ்மீா் இல்லை கராச்சி என கேலி செய்த கௌதம் கம்பீா்..

ஆசிரியர் - Editor
இலங்கை அணிக்கு பாகிஸ்த்தானில் உச்ச பாதுகாப்பு..! கஷ்மீா் இல்லை கராச்சி என கேலி செய்த கௌதம் கம்பீா்..

பாகிஸ்த்தானில் 20ற்கு 20 போட்டியில் கலந்து கொள்வதற்கு சென்றுள்ள இலங்கை அணிக்கு வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு தொடா்பில் இந்திய கிாிகெட் வீரா் கௌதம் கம்பீா் தனது ட்விட்டா் பக்கத்தில் கேலி செய்திருக்கின்றாா். 

சர்வதேச கிரிக்கெட் பல ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் நடக்கிறது. அந்நாட்டிற்கு சென்றுள்ள இலங்கை அணிக்கு எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடந்து விடக்கூடாது என்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் நிறுவனம் பலத்த பாதுகாப்பு அளித்து வருகிறது. 

போட்டியில் பங்கேற்க சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஜனாதிபதிக்கு கொடுக்கும் அளவுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கிண்டலடித்துள்ளார். 

இது தொடர்பில் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கம்பீர், இலங்கை வீரர்களுக்கு பாகிஸ்தானில் கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பகிர்ந்து கேலி செய்துள்ளார். பாகிஸ்தானில் ஒருவர் எடுத்த காணொளியை பகிர்ந்த கம்பீர், இது காஷ்மீர் இல்லை. 

இது கராச்சி என்பதை நினைவு கூர்வோம்’’ என்று பதிவிட்டுள்ளார்.

Radio