இம்ரான்கானின் ஐ.நா உரை வெறும் குப்பை..! பிரபல இந்திய கிாிக்கெட் வீரா்கள் கண்டனம்..

ஆசிரியர் - Editor
இம்ரான்கானின் ஐ.நா உரை வெறும் குப்பை..! பிரபல இந்திய கிாிக்கெட் வீரா்கள் கண்டனம்..

ஐ.நா சபையில் பாகிஸ்த்தான் பிரதமரும், பிரபல கிாிக்கட் வீரருமான இம்ரான்கான் ஆற்றிய உரைக்கு இந்திய கிாிக்கட் வீரா் சேவாக் கண்டனம் தொிவித்த நிலையில் தற்போது சௌறவ் கங்குலியும் கண்டனம் தொிவித்திருக்கின்றாா். 

இம்ரான்கானின் உரை தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள கங்குலி இதுவரை இவ்வாறான ஒருஉரையை செவிமடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். உலகிற்கு சமாதானம் தேவை பாக்கிஸ்தானிற்கு முக்கியமாக அது அவசியம் 

என சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார் .ஆனால் அந்த நாட்டின் தலைவர் இவ்வாறு குப்பை உரையை ஆற்றுகின்றார் எனவும் கங்குலி தெரிவித்துள்ளார். உலகம் அறிந்த கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் இல்லை இது எனவும் குறிப்பிட்டுள்ள கங்குலி 

இம்ரான்கான் ஐநா உரை மிகவும் மோசமானது எனவும் குறிப்பிட்டுள்ளார். இம்ரான்கானின் உரை குறித்து கடும் கண்டனம் வெளியிட்டுள்ள விரேந்திர செவாக் இம்ரான் கான் தன்னை தானே அவமானப்படுத்துவதற்காக புதிய வழிமுறைகளை கண்டுபிடிக்கின்றார் 

என குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை இம்ரான் கானின் இந்த உரைக்கு முகமட் சமி ஹர்பஜன் சிங் இர்பான் பதான் போன்ற வீரர்களும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

Ads
Radio
×