பாகிஸ்த்தான அணியின் பெயா் விபரம் வெளியானது..! அஹ்மட் ஷெசாட் மற்றும் உமர் அக்மல் மீண்டும் அணியில்..

ஆசிரியர் - Editor
பாகிஸ்த்தான அணியின் பெயா் விபரம் வெளியானது..! அஹ்மட் ஷெசாட் மற்றும் உமர் அக்மல் மீண்டும் அணியில்..

இலங்கைக்கு எதிரான 20ற்கு 20 தொடாில் பங்குபற்றவுள்ள பாகிஸ்தான் அணியின் விபரம் இன்று அவிறிக்கப்பட்டிருக்கின்றது. 

அஹ்மட் ஷெசாட் மற்றும் உமர் அக்மல் ஆகியோர் மீண்டும் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 

மூன்று போட்டிகள் கொண்ட ‘ருவென்டி 20’ தொடரில் பங்கேற்கின்றது.ஒருநாள் தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில் எதிர்வரும் ‘ருவென்டி 20’ தொடருக்கான 

அணி விபரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழாமுக்காக அஹ்மட் ஷெசாட் மற்றும் உமர் அக்மல் ஆகியோர் முறையே 16 மாதங்கள் மற்றும் மூன்று வருடங்களின் பின்னர் 

மீண்டும் அணிக்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்றமை முக்கிய விடயமாகப் பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளரும் தலைமைத் தெரிவாளருமாக 

முன்னாள் தலைவர் மிஷ்பா உல் ஹக் விளங்கும் நிலையில், இவர்களின் மீள் வருகை அமைந்துள்ளது. 

அதேவேளை, இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் காயமடைந்த இமாம் உல் ஹக் இந்தக் குழாமில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

இதேவேளை, கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பிரகாசித்த இப்திகார் அஹ்மட்டும் அணிக்கு மீள அழைக்கப்பட்டுள்ளார்.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ‘ருவென்டி 20’ போட்டி எதிர்வரும் சனிக்கிழமை லாகூரில் ஆரம்பமாகின்றது. 

தொடர்ந்து இரண்டாவது மூன்றாவது போட்டிகளும் அந்த மைதானத்திலேயே இடம்பெறுகின்றது.

அணி விபரம் – சர்பராஸ் அஹ்மட் (தலைவர்), பாபர் அசாம், அஹ்மட் ஷெசாட், ஆசிப் அலி, பஹீம் அஷ்ரப், பகர் சமான், ஹரிஸ் சொஹைல், 

இப்திகார் அஹ்மட், இமாட் வசிம், மொஹமட் அமிர், மொஹமட் ஹஸ்னைன், மொஹமட் நவாஸ், சதாப் கான், உமர் அக்மல், உஸ்மான் ஷின்வாரி, வஹாப் ரியாஸ்

Radio
×