SuperTopAds

ஐ.தே.முன்னணியுடன் கூட்டணி அமைக்கும் த.தே.கூட்டமைப்பு?

ஆசிரியர் - Editor II
ஐ.தே.முன்னணியுடன் கூட்டணி அமைக்கும் த.தே.கூட்டமைப்பு?

த.தே.கூட்டமைப்பு, ஐ.தே.முன்னணியுடன் கூட்டணி அமைத்தால், நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு கிடைக்கலாம் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனுரகுமார திஸாநாயக்க தற்போது எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் பதவியை வகித்து வருகிறார்.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணைந்தால் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு பொறுப்புமிக்க அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என சிங்கள வார பத்திரிகை கூறியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் கூட்டணி அமைப்பது என்பது நாட்டின் தற்போதைய அரசியலில் நடக்கும் மாபெரும் புரட்சி என்பதுடன் ஐக்கிய தேசிய முன்னணியின் தனி அரசாங்கம் அமையும் அடையாளங்கள் தென்படுவதாகவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதற்காக புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

இதற்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்புகிறது.

இதனால், புதிய வேலைத்திட்டம் குறித்து இரண்டு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரியவருகிறது எனவும் சிங்கள பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.

எது எப்படி இருந்த போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தரப்பில் இந்த செய்தியை உறுதிப்படுத்தும் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை