SuperTopAds

வவுனியாவில் ஊடகவியலாளரின் பணிக்கு இடையூறு ஏற்படுத்திய பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர் (படங்கள்)

ஆசிரியர் - Admin
வவுனியாவில் ஊடகவியலாளரின் பணிக்கு இடையூறு ஏற்படுத்திய பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர் (படங்கள்)

இலங்கை ரீதியாக இன்று காலை பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இ.போ.ச ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பொன்றை.  மேற்கொண்டிருந்தனர்.

குறித்த செய்தியை சேகரிக்கச் சென்ற வவுனியா ஊடகவியலாளரின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவிலும் இ.போ.ச ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டிருந்தார்கள்.

அவற்றை காணொளி எடுத்துக்கொண்டிருந்த ஊடகவியலாளருக்கு குறுக்கே சென்று காணொளி எடுப்பதற்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளார்.

அப்போது சிவிலுடையிலுள்ள பொலிஸ் உத்தியோகத்தரிடம் காணொளி எடுக்கும் போது தடுக்க தடுக்க உள்ளே வாறீர்கள் என வினவியபோது தாங்கள் போவதனை பார்த்து காணொளியை எடுக்குமாறு கூறி ஊடகவியலாளருடன் முரண்பட்டிருந்தார்.

நிலைமைகளை பொலிசாருக்கு தெரியப்படுத்திய ஊடகவியலாளர் இவ்விடயம் குறித்து வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அலுவலகத்திலுள்ள பொலிஸ் உத்தியோகத்தரின் கவனத்திற்குக் கொண்டு வந்து பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

வவுனியாவில் இவ்வாறு இடம்பெறும் நிகழ்வுகள், சம்பவங்களை, செய்திகளாக  பொதுமக்களுக்கு கொண்டு செல்ல முற்படும் ஊடகவியலாளர்களின் பணிகளுக்கும் இடையூறுகள் மற்றும் அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறித்தும் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.