SuperTopAds

ஊடகவியலாளர் சிவராமை கொன்றவர்களை சிவசக்தி ஆனந்தனுக்கு தெரியுமாம்

ஆசிரியர் - Editor II
ஊடகவியலாளர் சிவராமை கொன்றவர்களை சிவசக்தி ஆனந்தனுக்கு தெரியுமாம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு காரணமான ஊடகவியலாளர் சிவராமை கொன்றவர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே உள்ளனர் என வன்னி பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று வவுனியா பாவக்குளத்தில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமது கூட்டமைப்புடன் சேரவுள்ளதாக முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம் தன்னிடம் தெரிவித்துள்ளதாக சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டார்.

இடைக்கால அறிக்கையை தாம் குழப்பியதாக இருக்கக்கூடாது எனவும் அரசாங்கம் தேவைப்பட்டால் குழப்பட்டும் என ஊடகவியலாளர் சிவராமை கொன்றுவிட்டு கூட்டமைப்புக்கள் இருப்பவர்கள் இவ்வாறு தெரிவிப்பதாகவும் சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்தள்ளார்.

ஆனால் அரசு இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் மூலம் இடைக்கால அறிக்கைக்கான ஆதரவை பார்ப்பதாக தெரிவித்த சிவசக்தி ஆனந்தன் கடந்த ஒரு மாதமாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு கோடி அரசிடம் வாங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் இதனை ஒரு பாராளுமன்ற உறுப்பினராவது அதை மறுக்கவில்லை என தெரிவித்த சிவசக்தி ஆனந்தன் தான் சவால் விடுவதாகவும் முடிந்தால் ஒரு பாராளுமன்ற உறுப்பினராவது இதை மறுப்பார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளா