SuperTopAds

>அரசியல் தீர்வுக்கான பயணத்தை சம்பந்தனே குழப்பினார்! மகிந்த குற்றச்சாட்டு

ஆசிரியர் - Editor II
>அரசியல் தீர்வுக்கான பயணத்தை சம்பந்தனே குழப்பினார்! மகிந்த குற்றச்சாட்டு

அரசியல் தீர்வை நோக்கிப் பயணிப்பதற்காகத் தன்னால் விடுக்கப்பட்ட அழைப்புகளை சம்பந்தன் நிராகரித்தே செயற்பட்டார் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியின்போதே மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்காக பல வழிகளிலும் நாம் முயற்சித்தோம்.

அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவருவதற்கும் உத்தேசித்திருந்தோம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதயசுத்தியுடன் செயற்படாததாலேயே அந்த முயற்சிகள் கைகூடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்று வழங்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டியிலிருந்து தான் இன்னும் பின்வாங்கவில்லை.

அரசியல் தீர்வை நோக்கிப் பயணிப்பதற்காகத் தன்னால் விடுக்கப்பட்ட அழைப்புகளை சம்பந்தன் நிராகரித்தே செயற்பட்டார் என்றும் மகிந்த கூறியுள்ளார்.

மேலும், தாமரை மொட்டு சின்னத்தில் தனது தலைமையின்கீழ் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாட்டின் அரசியல் சக்தியாக மாற்றமடையுமாக இருந்தால் தமிழர்கள் மட்டுமன்றி, சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளும் அரசியலமைப்பொன்றை உருவாக்குவேன் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, புதிய அரசியலமைப்பொன்றை இந்த அரசு உருவாக்கினாலும் அனைத்து இன மக்களின் அங்கீகாரத்துடன் மட்டுமே அதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.