விக்கெட்டுக்களை அள்ளிய மலிங்க ; 37 ஓட்டத்தால் இலங்கை திரில் வெற்றி

நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு - 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி திரில் வெற்றிபெற்றுள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி இலங்கை கிரிக்கெட் அணியுடன் டெஸ்ட் மற்றும் இருபதுக்கு - 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
இதில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது 1:1 என்ற கணக்கில் சமநிலையில் முடிய மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரை நியூஸிலந்து அணி 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந் நிலையில் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்றைய தினம் கண்டி பல்லேகல மைதானத்தில் இரவு 7.00 மணிக்கு ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 125 ஓட்டங்களை குவித்தது. 126 ஓட்டம் என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நியூஸிலாந்து அணி மலிங்க மற்றும் அகில தனஞ்சயவின் பந்துப் பரிமாற்றங்களினால் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறியது.
இறுதியாக நியூஸிலாந்து அணி 16 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 88 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 37 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.
நியூஸிலாந்து அணி சார்பில் கொலின் முன்ரோ 12 ஓட்டத்தையும் மிட்செல் சண்டனர் 12 ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழந்ததுடன், டிம் சவுதி 28 ஓட்டத்துடன் இறுதி வரை ஆட்டமிழக்காதிருந்தனர்.
நியூஸிலாந்து அணியின் ஏனைய வீரர்கள் அனைவரும் அதற்கும் குறைவான ஓட்டத்துடனும், டக்கவுட்டுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் லசித் மலிங்க 5 விக்கெட்டுக்களையும், அகில தனஞ்சய 2 விக்கெட்டுக்களையும், வணிந்து அஷரங்க மற்றும் சந்தகன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும்