30 வருடங்கள் தேடுவாா் அற்று கிடந்த முள்ளியவளை வீதிக்கு விடிவு..! நோில் பாா்வையிட்ட ரவிகரன்..

ஆசிரியர் - Editor I
30 வருடங்கள் தேடுவாா் அற்று கிடந்த முள்ளியவளை வீதிக்கு விடிவு..! நோில் பாா்வையிட்ட ரவிகரன்..

முள்ளியவளை பெருந்தெரு வேலைகளை ரவிகரன் பாா்வையிட்டாா். கடந்த முப்பது ஆண்டு காலத்துக்கும் மேலாக சேதமான, பாவிக்கமுடியாதநிலையில் இருந்த இந்தவீதி தொடர்பில் வடமாகாணசபை முன்னாள்உறுப்பினர் துரைராசா ரவிகரன் கருத்துத்தெரிவிக்கையில், 

முள்ளியவளை பெருந்தெரு என அழைக்கப்படும் காட்டாவிநாயகர் ஆலய அருகிலிருந்து சந்தியம்மன் வரையான இவ்வீதி, பலவருடங்களாக சீரற்றநிலையில் காணப்படுகின்றது. இதனால் இவ்வீதியை அண்டியுள்ள மக்கள் பலத்த சிரமங்களை எதிர்கொள்கின்றனர். 

மழைநீர் தேங்கி நிற்கும் சமயங்களில் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளால் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தனர். மேலும், வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் நிகழ்வுகளில் உப்புநீரில் விளக்கெரியும் அற்புதத்துக்கான உப்புநீரை எடுத்துவருவதற்காக 

காட்டாவிநாயகர் ஆலயத்திலிருந்து பக்தர்கள் இந்தப்பாதையால் தான் செல்வாா்கள்.இவ்வாறு மக்கள் பலரும் பலவகையிலும் இப்பாதையின் சீரற்ற நிலையினால் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்தப்பாதையின் சீரமைப்பானது மிகவும் முக்கியமானது 

என்று மக்கள் பலரும் தெரிவித்தபடி உள்ளனர். இதற்கு உதவவேண்டும் என 2017 ஆம் ஆண்டு எட்டாம் மாதம் எழுத்து மூலமான கோரிக்கையை வடமாகாண பிரதமசெயலாளர், திரு.அ.பத்திநாதன் அவர்களிடம் சமர்ப்பித்திருந்தேன். 

அவரும் அதைக்கரிசனையுடன் ஆராய்ந்து என்னுடன் நேரடியாகவும் கதைத்தார். மேலும், இதற்கான மதிப்பீட்டறிக்கையை தயாரிக்கும் பொருட்டு, வீதிஅபிவிருத்தி திணைக்களம் மற்றும் நீர்ப்பாசனத்திணைக்கள உயர்நிலை அதிகாரிகளுடன் 

தனது பிரதிநிதியாக பிரதிப்பிரதமசெயலாளர் திரு.உமாகாந்தன் அவர்களையும் அனுப்பினார். அவர்களுடன் நானும் சோ்ந்து அவ்வீதிமுழுவதுமாக பார்வையிட்டுடோம். நீண்ட கருத்துப்பரிமாற்றங்களின் பின் இதற்கான மதிப்பீட்டறிக்கையானது 

வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டது. மதிப்பீட்டறிக்கையில் குறிப்பிடப்பட்ட தொகையான முப்பத்தைந்து மில்லியன் தொகையை ஒரே தடவையில் ஒதுக்கமுடியாத நிலையில் பிரதமசெயலாளர் என்னுடன் கலந்துரையாடினார்.

மூன்றுதடவை பகுதி பகுதியாக இச்சீரமைப்புப்பணிக்கான நிதியொதுக்கும் வகையில், 2018இல் முதல்கட்டமாக பதினைந்துமில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைகள் நடைபெற்றன.அதன் இரண்டாம் கட்டமாக 2019 இல் பத்துமில்லியன் ஒதுக்கப்பட்டு 

தற்போது வேலைகள் நடைபெறுகின்றன. மிகுதி வேலைகள் 2020 இல் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப்பெருந்தெரு சீரமைப்பு விடயத்தில் எனது கோரிக்கையை ஏற்று, 

மாகாணக்குறித்தொதுக்கப்பட்டநிதியின் மூலம் நிதியினை ஒதுக்கி, வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மேற்பார்வையில், நிறைவேற்றிக்கொண்டிருப்பதற்காக எனது மக்கள் சாா்பாக வடமாகாணபிரதமசெயலாளர் அ.பத்திநாதனுக்கு நன்றி கூறுகிறேன் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு