பூநகாியில் பாாிய சுற்றுலா வலயம்..! இடமும் தோ்வாகிவிட்டது என்கிறாா் பிரதமா் ரணில்..

ஆசிரியர் - Editor I
பூநகாியில் பாாிய சுற்றுலா வலயம்..! இடமும் தோ்வாகிவிட்டது என்கிறாா் பிரதமா் ரணில்..

கிளிநொச்சி- பூநகாி நகருக்கு அண்மையில் உல்லாச துறையை மேம்படுத்தும் வகையில் உல்லா சத்துறை வலயம் ஒன்றை உருவாக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக கூறியிருக்கும் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க அதற்கான இடமும் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளாா். 

மயிலிட்டி துறைமுகம் புனரமைக்கப்பட்டு இன்றைய தினம் மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதமா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், 

கடந்த ஆட்சிக்காலத்தில் வீதிகள் மட்டுமே புனரமைப்பு செய்யப்பட்டது. ஆனாலும் எங்களுடைய ஆட்சிக்காலத்தில் நாம் பொருளாதார, சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்போம்  அதன் ஒரு அங்கமாகவே மயிலிட்டி துறைமுகமும் அபிவிருத்தி செய்யப்படுகிறது. 

இதேபோல் பருத்துறை துறைமுகம், காங்கேசன்துறை துறைமுகம், குருநகா், காரைநகா் போன்ற துறைமுகங்களையும் நாம் புனரமைப்பு செய்யவுள்ளோம். இதேபோல் பூநகாி பிரதேசத்தில் சுற்றுலாத்துறை வலயம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். 

அதற்கான இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு