தோற்கடிக்க வெளிநாடுகள் முயற்சிக்கலாம்!
இலங்கையின் அரசியல், உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் உரிமை, வெளிநாடுகளுக்கு இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர், மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தங்காலை கால்டன் இல்லத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஒழுக்கத்தை பாதுகாக்கக் கூடிய தலைவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். தேர்தலில் நாம் வெற்றிபெற வேண்டும். இல்லையெனில் இந்த நாட்டு மக்கள் அழிவடைந்து விடுவர்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் தன்னைத் தோற்கடிக்க வெளிநாடுகள் ஆற்றிய கடமைகள் எனக்கு தெரியும். அவர்கள் இம்முறையும் அவ்வாறு நடந்து கொள்ளலாம்.
எனவே வெளிநாடுகளுக்கு எவ்வித உரிமையும் இல்லை. எமது நாட்டு அரசியல், உள்விவகாரங்களில் தலையிட எனவே தலையிட வேண்டாமென அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என்றார்.