வட மாகாணத்தின் சுகாதார மேம்பாட்டிற்கு நெதர்லாந்து 9 பில்லியன் கடனுதவி

ஆசிரியர் - Admin
வட மாகாணத்தின் சுகாதார மேம்பாட்டிற்கு நெதர்லாந்து 9 பில்லியன் கடனுதவி

வடக்கு மாகாணத்தின் 4 வைத்தியசாலைகளின் அபிவிருத்தி உள்ளிட்ட மாகாணத்தின் சுகாதார சேவைகளை மேற்படுத்துவதற்கு நெதர்லாந்து அரசால் 9 பில்லியன் ரூபா ( 45 மில்லியன் யூரோ) கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை நிதி அமைச்சுக்கும் நெதர்லாந்து இங்க் வங்கிக்கும் (ING Bank NV) இடையே இதுதொடர்பான கடன் உடன்படிக்கை நேற்றுமுன்தினம் கைச்சாத்திடப்பட்டது.

வட மாகாணத்தின் சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதல் மற்றும் பருத்தித்துறை, மாங்குளம் ஆதார வைத்தியசாலைகள், கிளிநொச்சி, வவுனியா மாவட்ட வைத்தியசாலைகள் ஆகியவற்றை அபிவிருத்தி செய்வதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

 உடன்படிக்கையில் நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எச். சமரதுங்க மற்றும் நெதர்லாந்து அதிகாரிகள் கைச்சாத்திட்டனர்.

நெதர்லாந்துக்கான இலங்கை தூதுவர் சுமித் நாகநந்த மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் செல்வி ஜோயானி டூர்னிவாட் ஆகியோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வடக்கில் புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் ஈடுபட்டுள்ள அரசு இந் நிதியைக் கொண்டு வட மாகாணத்தில் சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றது என்று நிதி அமைச்சுத் தெரிவித்துள்ளது.


Radio
×