ஜனாதிபதி, பிரதமாின் கடித தலைப்புக்களை பயன்படுத்தி மோசடி..! அதிா்ச்சியில் பொலிஸாா்.

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி, பிரதமாின் கடித தலைப்புக்களை பயன்படுத்தி மோசடி..! அதிா்ச்சியில் பொலிஸாா்.

ஜனாதிபதி செயலகம், பிரதமா் மற்றும் மின்சாரசபையின் கடித தலைப்புக்களை போலியாக தயாாித்து வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுப்பதாக கூறி 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட நபா் ஹட்டன் பொலிஸாாினால் கைது செய்யப்பட்டுள்ளாா். 

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் இலங்கை பஸ் போக்குவத்து சபையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

குறித்த நபர் யுவதி ஒருவருக்கு தொழில் வாய்பு பெற்றுதருவதாக கூறி, இது போன்ற போலியான ஆவணங்களை தாமே தயாரித்து ஏமாற்றி பணம் பெற்றுள்ளதாக, குறித்த யுவதி ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றினை பதிவு செய்திருந்தார். 

இதற்கு அமைய ஹட்டன் பொலிஸாரினால் மேற்கொள்ளபட்ட விசாரணைகளின் போது, குறித்த நபர் கைது செய்யபட்டுள்ளார். கைது செய்யபட்ட சந்தேக நபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு