கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

கராச்சியில் இருந்து போதைப்பொருட்களுடன் வந்த இரு படகுகள் சிக்கின!

ஆசிரியர் - Admin
கராச்சியில் இருந்து போதைப்பொருட்களுடன் வந்த இரு படகுகள் சிக்கின!

இந்தியா வழங்கிய புலனாய்வு எச்சரிக்கையை தொடர்ந்து கராச்சியிலிருந்து போதைப்பொருட்களை ஏற்றிய இரண்டு படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர் என இந்திய செய்திச்சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் கராச்சியிலிருந்து இலங்கை நோக்கி சென்று கொண்டிருந்த படகுகள் குறித்து இலங்கை அதிகாரிகளை எச்சரித்ததை தொடர்ந்தே அந்த படகுகள் கைப்பற்றப்பட்டன என இந்திய செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் இந்திய அதிகாரிகளிற்கு வழங்கிய தகவல்களை அவர்கள் இலங்கை அதிகாரிகளிற்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படையினர் தக்க தருணத்தில் நடவடிக்கை எடுத்து இரு படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த போதைப்பொருள் வர்த்தகத்தில் ஐஎஸ் அமைப்பு ஈடுபட்டுள்ளது அவர்களிற்கு இதன் மூலமே வருமானம் கிடைக்கின்றது என இந்திய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கிடைக்கும் பணத்தை பயன்படுத்தி இலங்கையில் தீவிரவாத கொள்கைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான நிதியை பெற்றுக்கொள்கின்றனர் எனவும் இந்திய புலனாய்வு அதிகாரிகள்

Radio
×