மிருகபலி வேள்விக்கு தடை - மேன்முறையீட்டு மனு மீது ஜூலை 18இல் தீர்ப்பு!
இந்து ஆலயங்களில் மிருகபலி வேள்வி நடத்த தடைவிதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 18ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம்- கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயம் சார்பில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விவாதம், சமர்ப்பணங்கள் நிறைவடைந்த நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று வழக்கு விசாரணை இடம்பெற்ற போது, ஜூலை 18ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் அறிவித்தகர்.