சற்று முன்னர் நிலைகுலைந்த இந்தியா வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிவரும்; பறிபோன 6 முக்கிய விக்கெட்

ஆசிரியர் - Admin
சற்று முன்னர் நிலைகுலைந்த இந்தியா வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிவரும்; பறிபோன 6 முக்கிய விக்கெட்

240 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணி சற்று முன்னர் 6 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 191 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்திய அணி சார்பில் ஆரம்ப வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா ஒரு ஓட்டத்துடன் 1.3 ஆவது ஓவரில் ஹென்றியின் பந்தில் டொம் லெதமிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய விராட் கோலியும் ஒரு ஓட்டத்துடன் 2.4 ஆவது ஓவரில் டிரெண்ட் போல்டின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர். 

அது மாத்திரமன்றி ஆரம்ப வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுலும் ஒரு ஓட்டத்துடன் 3.1 ஆவது ஓவரில் ஹென்றியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்துள்ளார்.

இவர்களின் ஆட்டமிழப்பானது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

45 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

Photo credit : ICC

Radio
×