SuperTopAds

தொழிநுட்ப ஆய்வுகள் நிறைவடையும் வரை Smart Lab pole பொருத்தும் பணிகளுக்கு தடை..! மக்களின் கோாிக்கைக்கு இணங்கி ஆளுநா் அதிரடி..

ஆசிரியர் - Editor I
தொழிநுட்ப ஆய்வுகள் நிறைவடையும் வரை Smart Lab pole பொருத்தும் பணிகளுக்கு தடை..! மக்களின் கோாிக்கைக்கு இணங்கி ஆளுநா் அதிரடி..

யாழ்.மாநகர எல்லைக்குள் Smart Lab pole அமைக்கும் பணிகளை 10 நாட்களுக்கு நிறுத்துமாறு பணித்துள்ள வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன், உாிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னதாகவே Smart Lab pole அமைக்கும் பணிகளை ஆரம்பிக்க உத்தரவிட்டுள்ளாா். 

கஸ்தூரியார் வீதியில் உள்ள Smart Lab pole தொடர்பில் அப் பிரதேச மக்கள் மற்றும் பாடசாலைச் சமூகத்தைச் சேர்ந்த பெற்றோர்களால் நேற்று நடாத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தினைத் தொடர்ந்து அப் பகுதி மக்கள் Smart Lab pole னை தடைசெய்யுமாறு 

ஆளுனர் அலுவலகத்தில் கோரிக்கை விடுத்தனர். அவ்வகையில் நேற்று யாழ்.மாநகர சபை அதிகாரிகளுக்கு குறித்த Smart Lab pole பற்றிய கோப்புக்களுடன் சமூகமளிக்கமாறு அளுநர்  அலுவலகத்தினால் அறிவிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் இன்று காலை சமூகமளித்த யாழ்.மாநகர சபை உயர்அதிகாரிகளுக்கு குறித்த Smart Lab pole வேலைத்திட்டத்தினை 10 நாட்களுக்கு இடை நிறுத்துமாறும். இது தொடர்பில் ஆராய்வதற்க தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவை (technical evaluation committee) 

ஆளுநர் நியமிக்க இருப்பதாகவும் குறித்த குழு தருகின்ற தொழில் நுட்ப அறிக்கையைக் கொண்டு மேலதிக நடவடிக்கை எடுப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.