வடக்கின் பல பாகங்களில் இன்று திங்கட்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

ஆசிரியர் - Admin
வடக்கின் பல பாகங்களில் இன்று திங்கட்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று திங்கட்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 05.00  மணி வரை, மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்.பிரதேசத்தில்: 

இன்று காலை 08.30 மணி முதல் பிற்பகல் 05.00 மணி வரை யாழ். இளவாலை, வித்தகபுரம், சேந்தான்குளம், மயிலிட்டி, மயிலிட்டி கரிசன் ஐந்தாவது பொறியியல் படைமுகாம், தையிட்டி, வறுத்தலை விளான், வீமன்காமம், காங்கேசன்துறை கரிசன் ஐந்தாவது பொறியியல் படைமுகாம், காங்கேசன்துறை வடக்கு கடற்படை முகாம், மயிலிட்டி கரிசன் ஐந்தாவது பொறியியல் படை முகாம் (புதியது), பலாலி இராணுவத் தலைமைக் காரியாலயம், பலாலி இலங்கை விமானப்படை முகாம், பலாலி விமானப்படை ஓய்வுகால விடுதி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு