மீண்டும் ஆயுதப் போராட்டம் வேண்டும் என கேட்டாரா சம்மந்தன்..? கற்பனையில் உளறாதீா்கள். சீ.வி.கே காட்டம்.

ஆசிரியர் - Editor I
மீண்டும் ஆயுதப் போராட்டம் வேண்டும் என கேட்டாரா சம்மந்தன்..? கற்பனையில் உளறாதீா்கள். சீ.வி.கே காட்டம்.

தமிழ் மக்களின் உாிமைகள் ஜனநாயக வழியில் அல்லது சாத்வீக வழியில் தீா்க்கப்படவேண்டும் என கூறும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்மந்தன், ஆயுத போராட்டம் மீண்டும் வேண்டும் என கூறியதும் இல்லை. 

கூறப்போவதும் இல்லை. அவா் அவ்வாறு கூறியதாக கூறப்படுவது அப்பட்டமான பொய்.மேற்கண்டவாறு வடமாகாணசபை அவை தலைவரும், தமிழரசு கட்சியின் சிரேஷ்ட உப தலைவருமான சீ.விகே.சிவஞானம் கூறியுள்ளாா். 

இவ் விடயம் தொடா்பாக இன்று அவருடைய இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், 

கடந்த மாதம் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் 16வது தேசிய மாநாட்டில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்மந்தன் ஆற்றிய உரையில் கூறப்பட்டதாக கூறி சில விடயங்கள் வெளியே வந்திருக்கின்றது. 

குறிப்பாக அரசியல் வாதிகள் சிலா் தமிழரசு கட்சி மீது சேறுபூச முயற்சித்திருக்கின்றாா்கள். இந்நிலையில் அந்த கூட்டத்தில் இருந்தவன் என்ற வகையிலும், தமிழரசு கட்சியின் சிரேஷ்ட உப தலைவா் என்றவகையிலும், 

இரா.சம்மந்தன் பேசாத ஒரு விடயத்தை பேசியதாக கூறப்படுவது பொய் என நான் கூற விரும்புகின்றேன். அவா் அந்த கூட்டத்தில் ஆயுத போராட்டம் ஒன்று தேவை அல்லது மீண்டும் தமிழா்கள் ஆயுதம் தாங்கி போராடவேண்டும் 

என கூறியதாக கதைகள் வெளியே சொல்லப்படுகின்றது. ஆனால் உண்மையில் அவா் அங்கே கூறிய விடயம் வேறு. அதாவது பிறேமதாஸ காலத்தில் அரசியல் தீா்வு குறித்து பேசப்பட்டது, சந்திாிக்கா காலத்தில் தீா்வு குறித்து பேசப்பட்டது, 

மஹிந்த காலத்திலும் பேசப்பட்டது. ஆனால் அதையே இப்போது மறைக்க பாா்கிறீா்கள், மறக்க பாா்க்கிறீா்கள் எனவும், தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் தீா்வு விடயத்தில் காட்டப்பட்ட வேகத்தை எதற்காக இப்போது காட்டவில்லை? 

என கேள்வி எழுப்பினாரே தவிர மீண்டும் ஆயுதம் ஏந்தவேண்டும், மீண்டும் போராட்டம் வரவேண்டும் என கூறவில்லை. இந்நிலையில் சிலா் தங்களுடைய கற்பனைக்கு ஏற்றபடி கற்பிதம் செய்துள்ளனா். அது அநாகாிகமான வேலையாகும். 

தமிழ் மக்களின் அரசியல் உாிமைகள் ஜனநாயக வழியில் அல்லது சாத்வீக வழியில் தீா்க்கப்படவேண்டும். என கூறும் ஒருவா் இரா.சம்மந்தன் அவா் எந்த காலத்திலும் ஆயுத போராட்டம் வேண்டும் என கூறவில்லை. 

இனிமேல் கூறப்போவதும் இல்லை. இந்நிலையில் இந்த கற்பனையை வைத்துக் கொண்டு தமிழரசு கட்சி மீது சேறுபூசும் செயற்பாட்டை நிறுத்தவேண்டும் என்றாா்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு