பட்டதாாிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. 2ம் கட்டமாக 20 ஆயிரம் பட்டதாாிகளுக்கு அரச நியமனம்..!

ஆசிரியர் - Editor I
பட்டதாாிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. 2ம் கட்டமாக 20 ஆயிரம் பட்டதாாிகளுக்கு அரச நியமனம்..!

பட்டதாரிகள் நியமனத்தின் 2வது கட்ட நியமனம் ஓகஸ்ட் மாதம் இறுதிப் புகிதியளவில் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்தார்.

வேலையற்ற பட்டதாரிகளிற்கான அரச வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தில் முதல் கட்டமாக 3ஆயிரந்து 500 பேருக்கு நியமனம் வழங்கப்பட்ட நிலையில் 2ம் கட்டமாக 20 ஆயிரம் பேரை உள்வாங்க திட்டமிடப்பட்டு பணிகள் முன்னெடுக்கும் நிலையில் 

அதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. அவ்வாறு இடம்பெறும் முயற்சியில் தற்போது கிடைத்த பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் ஆண்டு ரீதியில் வகைப்படுத்தப்பட்டு பெறப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் 20 ஆயிரம் பட்டதாரிகளும் பட்டப்படிப்பினை நிறைவு செய்த ஆண்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இவர்களிற்கான நியமனத்திற்கான அனுமதிக்காக அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவையின் 

அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது. 

இவற்றின் அடிப்படையில் செப்ரெம்பர் முதல் பணியாற்றும் வகையில் ஓகஸ்ட் மாதத்தின் இறுதியில் 20 ஆயிரம் பட்டதாரிகளிற்கும் நியமனம் வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு