SuperTopAds

லண்டன் குப்பைகள் இலங்கையில் கொட்டப்படுகிறதா..? 65 கொள்கலன்கள் சுங்க பிாிவிடம். நாளை அம்பலமாகும் உண்மை..

ஆசிரியர் - Editor I
லண்டன் குப்பைகள் இலங்கையில் கொட்டப்படுகிறதா..? 65 கொள்கலன்கள் சுங்க பிாிவிடம். நாளை அம்பலமாகும் உண்மை..

பிாிட்டன் நாட்டிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் 65 கொள்கலன்கள் சுங்க திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் எடுக்கப்பட்டிருக்கின்றது. 

இந்த கொள்கலன்களில் பயன்படுத்தப்பட்ட மெத்தைகள் உட்பட பல பொருட்கள் இருப்பதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கொள்கலன்களில் கழிவு வகைகளை கொண்ட பொருட்கள் இருக்கலாம் என சந்தேகிப்பதாக சுங்க பிரிவின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இவை சூழலுக்கு பாதிப்புக்கு ஏற்படுத்தும் வகையில் பொருட்கள் இருக்கலாம் என சுங்க பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த கொள்கலன்களில் சிலவற்றை நாளையதினம் திறந்து சோதனையிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

தனியார் நிறுவனம் ஒன்றில் குறித்த கொள்கலன்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் மெத்தைகள் அடங்கிய 100 கொள்கலன்கள்

 இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தங்கள் நாடுகளின் கழிவுப்பொருட்களை வேறு நாடுகளுக்கு அனுப்பும் முறை 

தற்போது பிரபல நாடுகளின் ஒரு செயற்பாடாக மாறி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.