SuperTopAds

8ம் வகுப்பு மாணவியை திருமணம் முடித்த சஹரான் ஹாசீம்..! 10 வருடங்களில் 90 சிங்கள, தமிழ் பெண்கள் மதம் மாற்றப்பட்டனா்..

ஆசிரியர் - Editor I
8ம் வகுப்பு மாணவியை திருமணம் முடித்த சஹரான் ஹாசீம்..! 10 வருடங்களில் 90 சிங்கள, தமிழ் பெண்கள் மதம் மாற்றப்பட்டனா்..

இலங்கையில் கடந்த 10 வருடங்களில் 90 ஆயிரம் தமிழ், சிங்கள பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினா் அத்துரலிய ரத்தின தேரா் கூறியிருக்கின்றாா். 

நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு அவர் தொடந்தும் குறிப்பிடுகையில்,

அடுத்து வரும் புதிய அரசாங்கத்தின் கீழ் இந்த 90 ஆயிரம் பேர் தொடர்பில் விசாரணையொன்றை நடத்தி, 

விரும்பியவர்களுக்கு தான் ஏற்கனவே இருந்த சமயத்துக்கு செல்வதற்கு வழியமைத்துக் கொடுப்போம்.

பாடசாலை வயதிலுள்ள பெண் பிள்ளைகளை திருமணம் முடிக்க முடியாது என்ற சட்டம் நாட்டில் அமுலில் இருந்தும், மு

துகெலும்பு இல்லாத அரசாங்கத்துக்கு பயங்கரவாதி சஹ்ரான் பாடசாலை செல்லும் 8ஆம் ஆண்டு பிள்ளையை திருமணம் முடித்த போது தடுக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தில் பாடசாலை செல்லும் பிள்ளைகளை மணம் முடிக்கத் தடை செய்யும் விதத்தில் 

கடுமையான சட்டமொன்றையும் கொண்டுவரப் போவதாகவும் தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.