வடகிழக்கு மக்கள் மறந்துபோன தேசத்தின் புயல்கள் கரும்புலிகளின் நினைவு நாள்..! வடகிழக்கில் வழக்கத்தை விட இராணுவ பாதுகாப்பு உச்சம்..
தமிழீழ விடுதலை புலிகளின் கரும்புலிகள் நாளான நேற்றய தினம் வடகிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினதும், இராணுவ புலனாய்வாளா்களினதும் நடமாட்டம் அதிகளவில் இருந்த நிலை யில் கரும்புலிகளுக்கான நினைவேந்தல் ஒரு இடத்தில் மட்டுமே நடைபெற்றுள்ளது.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பெரியநீலாவணை, சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, காரைதீவு, திருக்கோவில், மல்வத்தை உள்ளிட்ட பொது இடங்கள் கோயில்கள் என்பன பாதுகாப்பு படை
மற்றும் புலனாய்வு துறையினரின் தீவிர கண்காணிப்பு உள்ளாகி இருந்தன. இம்முறை நாட்டில் இடம்பெற்ற அசம்பாவிதத்தை தொடர்ந்து அவசரகால தடை சட்டம் மேலும் ஒரு மாத காலமாக நீடிக்கப்பட்டதனால் கரும்புலிகள் தினம் நினைவு கூர சம்பந்தப்பட்ட தரப்பினர்
முன்வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் வட மாகாணத்தில் யாழில் பல்கலைக்கழக மாணவர்களால் கரும்புலிகள் தினம் நினைவு நினைவு கூறப்பட்டிருந்தது. அத்துடன் கிழக்கிலும் மட்டக்களப்பு அம்பாறை பகுதிகளிலும் நினைவு கூறப்பட்டிருந்தது.
இத்தினத்தில் கரும்புலிகளாக கடந்த கால விடுதலை போராட்டத்தில் தம்முயிரை நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதன்போது யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பல தரப்புகள்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படத்தினையும் கரும்புலிகளாக இன்னுயிர் நினைவு சின்னத்திற்கு சுடரேற்றியும் மலர்தூவியும் அஞ்சலி செலுத்தி குறித்த நாளை அனுஸ்டித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதே வேளை கரும்புலிகள தின நிகழ்வினை அனுஸ்டிப்பவர்கள் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஏற்கனவே பாதுகாப்பு தரப்பினர் அறிவித்தும் இருந்தனர்.கடந்த காலங்களில் வடக்கின் பல பகுதிகளில் கரும்புலி தின நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளதுடன்
முதற் கரும்புலி மில்லரின் நினைவு இடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. மில்லர் தாக்குதல் செய்து வீரச்சாவடைந்த நெல்லியடி பகுதியில் வழமை யாக நினைவுகூரல் இடம்பெறும். எனினும் எந்தவித பொது அமைப்போ புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள்
என கூறிக்கொள்வோரோ இம்முறை குறித்த நினைவு தினத்தை அனுஸ்டிக்கும் வகையில் எதுவித ஏற்பாடு செய்வதில் இருந்தும் விலகி இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. எனினும் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின்
அலுவலகமான அறிவகத்தில் நேற்று பகல் கரும்புலிகள் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.