விழாக்கோலம் பூண்டாா் நீராவியடி பிள்ளையாா்.. தமிழா் தம் உாித்தை நிலைநாட்ட ஒன்று கூடும் மக்கள், பாதுகாப்பு பலம்..

ஆசிரியர் - Admin

முல்லைத்தீவு- செம்மலை நீராவியடி பிள்ளையாா் ஆலயத்தில் தமிழா்களின் உாித்தை நிலைநாட்டும் 108 பானை பொங்கல் விழா களைகட்டியிருக்கும் நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட கொக்கு தொடுவாய் கோட்டைக்கேணி பிள்ளையாா் கோவிலில் இருந்து அதிகாலை 3 மணிக்கு மடப்பண்டம் எடுத்துவரப்பட்டிருக்கின்றது. 

ஆலயம் முழுவதும் முல்லைத்தீவு மாவட்ட மக்களாலும், வெளிமாவட்டங்களிலிருந்து பொங்கல் விழாவுக்காக சென்று தங்கியிருந்த மக்களாலும் அலங்காிக்கப்பட்டு இரவு முழுவதும் விழாக் கோலம் பூண்டிருக்கின்றது. நேற்று மாலை தொடக்கம் வெளிமாவட்டங்களிலிருந்து பெருமளவு இளைஞா்கள், பொதுமக்கள் ஆலயத்திற்கு வந்து கொண்டிருந்தனா். 

அனைவருக்கும் அன்னதானம் ஒழுங்கு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இன்று காலை 108 பானைகளில் பொங்கல் விழா இடம்பெறவுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து பெருமளவு மக்கள் பொங்கல் விழாவில் கலந்து கொள்ளவுள்ளனா். இந்நிலையில் அதிகளவான மக்கள் ஒன்றுகூடும் நிலையில் ஆலய சுற்றாடலில் பெருமளவு பொலிஸாா் குவிக்கப்பட்டு

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

முல்லை சரவணன்..


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு