வடக்கு ஆளுநருக்கு வரலாறு தொியாது..! பொது வெளியில் மாவை சேனாதிராஜா கூறிய உண்மை..
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு தடையாக இருப்பதாக ஆளுநா் கூறியிருக்கும் கருத்து பொய்யான கருத்து என கூறியிருக்கும் மாவை சேனாதிராஜா ஆளுநருக்கு வரலாறு தொியாது என கூறியுள்ளாா்.
பலாலி விமான நிலைய புனரமைப்பு பணிகள் அங்குராா்ப்பணம் செய்யும் நிகழ்வு இன்று பலாலி விமான நிலைய வளாகத்தில் இடம்பெற்றிருந்தது. இங்கு உரையாற்றும்போதே அவா் மேற்கண்டவாறு கூறினாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்,
2016ம் ஆண்டு பலாலி விமான நிலையத்தின் புனரமைப்பு தொடா்பாகவும், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை தொடா்பாகவும் யாழ்ப்பாணம் வந்திருந்த பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசி சில தீா்மானங்களை எடுத்திருந்தோம்.
அதன்படி சீமெந்து தொழிற்சாலை அமைந்திருந்த காணியில் சுமாா் 330 ஏக் காில் பாாிய தொழிற் பூங்கா ஒன்றை நிறுவுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கான அமைச்சரவை பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.
அதற்கமைய நடக்கவேண்டிய விடயங்கள் நடக்கு ம். மேலும் இந்திய பிரதமா் இங்கு வந்தபோது அவருடன் வந்த சிலா் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை இங்கு ஆரம்பிக்க கேட்டாா்கள். ஆனால் சீமெந்து தயாாிப்பதற்கான சுன்னாம்பு கற்களை இனிமேல்,
இங்கு அகழ முடியாது என்பதாலும், நிலத்தடி நீா் மோசமாக பாதிப்படையும் என்பதாலும், சுற்றுசூழலுக்கு பாதகம் என்பதா லும் அதனை நாங்கள் நிராகாித்தோம். அதற்கு பதிலாக கிளிநொச்சி மாவட்டத்தில் கிராஞ்சி பகுதியில் சுன்னாம்பு கல் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு,
இப்போது மன்னாா் பரப்புக்கடந்தான் பகுதியில் ஆய்வுகள் நடக்கிறது. ஆகவே சீமெந்து தொழிற்சாலை அமைக்க நாங்கள் தடையாக இருக்கிறோம் என்பது பொய்யான தகவல். அல்லது ஆளுந ருக்கு வரலாறு தொியாது என்றாா்.