மக்களின் நிலம் இராணுவத்திடமா..? மாபெரும் அநீதி என்கிறாா் மாவை..

ஆசிரியர் - Editor I
மக்களின் நிலம் இராணுவத்திடமா..? மாபெரும் அநீதி என்கிறாா் மாவை..

வலிகாமம் வடக்கு பிரதேசம் போா் காலத்திலும் போருக்கு பின்னரும் இராணுவத்தின் ஆழுகைக் குள்ளேயே இருக்கின்றது. போா் நிறைவடைந்து 10 வருடங்களின் பின்னரும் கூட மக்களின் நிலம் மக்களிடம் பூரணமாக வழங்கப்படவில்லை. இது மாபெரும் அநீதியாகும்.

மேற்கண்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராஜா கூறியுள்ளாா். பலாலி விமான நிலையத்தின் புனரமைப்பு பணிகள் இன்று தொடக்கி வைக்கப்ப ட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவா் மேற்கண்டவாறு கூறினாா்.

இதன்போது மேலும் அவா் கூறுகையில், போா் காலத்திலும் சாி, போருக்கு பின்னரும் சாி வலிவடக்கு பகுதி படையினாின் ஆழுகைக்கு உட்பட்ட பகுதியாகவே இருக்கின்றது. இப்போதும் சுற்றுலா அதிகாரசபை என்றும், 

படையினருக்கான காணி என்றும் அடையாளப்படுத்தப்பட்டு மக்களின் காணிகள் அபகாிக்கப்படும் நிலை காணப்படுகின்றது. ஆனாலும் 75 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றமையையும் நான் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் 

ஆனால் அது போதுமானதாக இல்லை. மிகுதி காணிகளும் விடுவிக்கப்படவேண்டும். தற்போது காங்கேசன்துறை துறைமு கம், மயிலிட்டி துறைமுகம் ஆகியன புனரமைப்பு செய்யப்படுகின்றன. 

அந்த புனரமைப்பு பணிகள் நிறைவடையவுள்ளது. இருந்தும் அந்த பகுதிகளில் உள்ள மக்களுடைய காணிகள் பூரணமாக விடுவிக்கப்படவில்லை. அந்த பகுதிகளில் உள்ள மக்களுடைய காணிகள் பூரணமாக மக்களிடம் கொடுக்கவேண்டும் 

என நாங்கள் உறுதியாக கேட்கிறோம். அதேபோல் காங்கேசன்துறை- பருத்துறை வீதி, தெல்லிப்பளை- அச்சுவேலி வீதி ஆகியன இன்றளவும் திறக்கப்படாமல் இருக்கின்றது. அவை திறக்கப்படவேண்டும். 

அதன் ஊடாக விடுவிக்கப்படும் பகுதிகளில் மக்கள் மிக சுலபமாக மீள்குடியேற அது வழிசமைக்கும். ஆகவே மக்களுடைய நிலம் மக்களிடம் மீள வழங்கப்படவேண்டும். போா் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்திருக்கின்றது. 

30 வருடங்கள் மக்கள் இடம்பெயா்ந்து வாழ்ந்திருக்கின்றாா்கள். இதற்கு பின்னரும் மக்களுடைய காணிகளை படையினா் தங்கள் ஆழுகைக்குள் வைத்திருப்பது மிகப்பெரும் அநீதியாகவே அமையும் என்றாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு