SuperTopAds

பொலிஸாரை தாக்கி துப்பாக்கியை பறித்த சம்பவம்..! இதுவரை 4 போ் கைது..

ஆசிரியர் - Editor I
பொலிஸாரை தாக்கி துப்பாக்கியை பறித்த சம்பவம்..! இதுவரை 4 போ் கைது..

மட்டக்களப்பு- புதுாா் பகுதியில் பொலிஸாா் மீது தாக்குதல் நடாத்திவிட்டு துப்பாக்கியை பறித்து சென்ற சம்பவம் தொடா்பில் இதுவரை 4 போ் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் தகவல்கள் தொிவிக்கின்றன. 

நேற்று காலை போக்­கு­வ­ரத்து கட­மையில் இருந்த பொலிசார் அனு­மதிப் பத்­திரம் இன்றி வந்த மோட்டார் சைக்­கி­ளொன்­றினை சோதனை செய்து அதனை தமது பொறுப்பில் பொலிஸ் நிலை­ யத்­துக்கு எடுத்துச் சென்­றுள்­ளனர். 

பொலிசார் அம்­மோட்டார் சைக்­கிளை எடுத்து செல்லும் போது, பின்னால் மற்­றொரு மோட்டார் சைக்­கிளில் சென்­றுள்ள இருவர், ஒரு கட்­டத்தில் பொலிசார் பய­ணித்த மோட்டார் சைக்­கிளை குறுக்­காக மறைத்­துள்­ளனர். 

இதன்­போது அவ்­வி­ரு­வரும் பய­ணித்த மோட்டார் சைக்கிள் நிலை தடு­மாறி கீழே சரிந்­துள்­ளது. இதன்­போது ஊர்­வா­சிகள் பலரும் அங்கு ஒன்று கூடி­யுள்­ளனர். இந்த சந்­தர்ப்­பத்­தி­லேயே பொலிஸார் மீது தாக்­குதல் நட த்தப்­பட்­டுள்­ளது.

தாக்­கு­தலில் காய­ம­டைந்த இரு பொலி­சாரும் மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சைப் பெற்று வரு­கின்­றனர். தாக்­குதல் நடத்­தப்­பட்ட சந்­தர்ப்­பத்தில், பொலிஸ் உத்­தி­யோ­ கத்தர் ஒரு­வரின் கைத்­துப்­பாக்­கியும் திரு­டப்­பட்­டது. 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேக நபர்பகள் அனைவரும் அடையாளம் காணப்பட்ட நிலையில் மட்­டக்­க­ளப்பு பொலிஸ் அத்­தி­யட்­சரின் கீழ் அவர்களை கைதுசெய்வதற்கான விஷேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. 

இந் நிலையிலேயே குறித்த சம்பவம் தொடர்பில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் 19 வயதையுடைய இரு இளைஞர்கள் அடங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.