யாழ்.மாவட்ட பாடசாலைகளில் பாதுகாப்பு வழங்கும் படையினா் மற்றும் பொலிஸாா் குறித்து பாாிய குற்றச்சாட்டு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட பாடசாலைகளில் பாதுகாப்பு வழங்கும் படையினா் மற்றும் பொலிஸாா் குறித்து பாாிய குற்றச்சாட்டு..!

உயிா்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னா் யாழ்.நகாிலும், நகருக்கு அண்மித்த பகுதிகளிலும் உள்ள சில பாடசாலைகளில் பாதுகாப்பு வழங்கும் பொலிஸாரும், படையினரும் மாணவா்கள் மற்றும் பெற்றோருடன் பொருந்தாத முறையில் நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குள் அடங்கும் ஒரு பாடசாலையின் முன்பாக கடமையில் நிற்கும் பொலிஸ் உத்தியோகஸ்த்தா் ஒருவா் பாடசாலைக்கு தாமதாக வந்த மாணவாிடம் தாமதமாக வந்ததற்கான காரணத்தை கேட்டு விசாாித்துள்ளாா். 

இவ்வாறு செயல்படுவது தொடர்பில் சில பெற்றோர் ஆசிரியர் ஒருவரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் குறித்த ஆசிரியர் அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். முதலில்  மாணவர்கள் அடுத்தது ஆசிரியர்களா எனவும் கேள்வி எழுப்பப்படுகின்றது.

இதனால் பாடசாலையின் நிர்வாகத்தில் படையினா், பொலிஸாாின் தலையீட்டை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் . எனக் கோரிக்கை விடுக்கப்படுகின்றது. இதேபோன்று நகரின் மத்தியில் உள்ள ஆரம்ப பாடசாலை முன்பாக பணியில் நிற்கும் படையினரும் 

மாணவர்களை ஏற்றி வரும் பெற்றோருடன் கைதிகளைப்போன்று நடாத்துவதாகவும் முறையிடப்படுகின்றமை தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.இளங்கோவனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது ,

குறித்த இரு பாடசாலை முன்பாக இடம்பெறும் செயல்கள் தொடர்பில் ஏற்கனவே தகவல் கிடைத்துள்ளது. இதனால் இவை தொடர்பில் உடனடியாக பொலிஸ் அதிகாரியின் கவனத்திற்கும் படைத் தலமைக்கும் கொண்டு செல்லப்படுவதோடு 

பாடசாலை நிர்வாகங்களிடமும் மாற்று ஒழுங்கமைப்புத் தொடர்பில் தெளிவூட்டப்படும். எனப் பதிலளித்தார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு