வல்வெட்டித்துறை மரக்கறி சந்தைக்கு சென்றால் இது இலவசம்..! வல்வெட்டித்துறை நகரசபையின் முன்மாதிாி..
பொலித்தீன் பாவனையை தடைசெய்யக்கோாி பல தரப்பட்ட முன்மாதிாி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், வல்வெட்டித்துறை நகரசபை ஒரு முன்மாதிாியான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.
வல்வெட்டித்துறை நகர சபை மரக்கறிச் சந்தையில் பொலித்தீன் பாவனையை முற்றாக தடை செய்துள்ளது. சந்தைக்கு வருபவர்கள் அனைவருக்கும் துணி பைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையத்துடன் இணைந்து துணிப்பைகளை தயாரிப்பதற்கான பயிற்சிகளை வழங்கி, துணி பைகளைப் பெற்று சந்தைப்படுத்தும் செயற்பாடையும் செய்து வருகிறது.