27 வருடங்களின் பின் சொந்த மண்ணில் கால்வைத்த கீாிமலை மக்கள்..!

ஆசிரியர் - Editor I
27 வருடங்களின் பின் சொந்த மண்ணில் கால்வைத்த கீாிமலை மக்கள்..!

யாழ் வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையினை சூழவுள்ள பொதுமக்களின் 62 ஏக்கர் தனியார் காணிகளை 

விடுவிக்கும் நடவடிக்கையின் ஆரம்ப கட்டமான காணிகளை இனங்காணும் நடவடிக்கை  ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பங்குபற்றலுடன் இன்று ஆரம்பமானது.

இந்த 62 ஏக்கர் காணிகளை நான்கு வலயங்களாக பிரித்து, அவற்றினை அளந்து அப்பிரதேச மக்களுக்கு வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் 

இன்றும் நாளை மற்றும் எதிர்வரும் திங்கட்கிழமையும் இடம்பெறவுள்ளதுடன் , இப்பிரதேசத்திற்குள் தமது காணி உள்ளவர்கள் தெல்லிப்பளை பிரதேச செயலாளரை 

தொடர்பு கொள்வதனூடாக தமது காணிகளை அடையாளப்படுத்தி அளவீடுகளை மேற்கொள்ள முடியும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

இதேவேளை 27 வருடங்களின் பின்னா் தமது சொந்த காணிகளுக்கு சென்ற மக்கள் கண்ணீருடன் தமது காணிகளை விரைவில் தாருங்கள் என ஆளுநாிடம் கேட்டனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு