மட்டக்களப்பை தொடா்ந்து காலியில் இராணுவ சிப்பாயின் துப்பாக்கியை பறிக்க முயன்றவா் மீது துப்பாக்கி சூடு..! சம்பவ இடத்திலேயே உயிாிழந்தாா்..

ஆசிரியர் - Editor I
மட்டக்களப்பை தொடா்ந்து காலியில் இராணுவ சிப்பாயின் துப்பாக்கியை பறிக்க முயன்றவா் மீது துப்பாக்கி சூடு..! சம்பவ இடத்திலேயே உயிாிழந்தாா்..

காலி மாவட்டம் அக்மீமன பகுதியில் உள்ள உபானந்த பாடசாலையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாயிடம் துப்பாக்கியை பறிக்க முயன்றவா் மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளது. 

அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாயிடமிருந்து நபா் ஒருவா் துப்பாக்கியை பறிக்க முயன்றுள்ளாா். இதனையடுத்து சுதாகாித்துக் கொண்ட இராணுவ சிப்பாய் துப்பாக்கியை பறிக்க முயன்றவரை சுட்டுள்ளாா். 

இதனையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவா் சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு