SuperTopAds

பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு பறக்கலாம்..! ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கும் சேவை..

ஆசிரியர் - Editor I
பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு பறக்கலாம்..! ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கும் சேவை..

சா்வதேச விமான நிலையமாக தரமுயா்த்தப்படும் பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கான முதலாவது விமான சேவை ஆகஸ்ட் மாதம் இடம்பெறும் என கூறப்படுகின்றது. 

இதற்­கு­ரிய வகை­யில் முதல்­கட்ட அபி­வி­ருத்­திப் பணி­கள் நாளை வெள்­ளிக்­கி­ழமை ஆரம்­ப­மா­க­ வுள்­ள­தா­கத் தொடர்­பு­டைய வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

இலங்­கை­யின் மூன்­றா­வது பன்­னாட்டு வானூர்தி நிலை­ய­மாக, பலாலி வானூர்தி நிலை­யத்தை அபி­வி­ருத்தி செய்­யும் பணி­கள் நாளை வெள்­ளிக்­கி­ழமை 

அமைச்­சர் அர்­ஜுன ரண­துங்க தலை­மை­யில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. 19.5 பில்­லி­யன் ரூபா செல­வில் பிராந்­திய வானூர்தி சேவை­களை நடத்­தக் கூடிய வகை­யில் பலாலி வானூர்தி நிலை­ யம் அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­வுள்­ளது.

இரண்டு கட்­டங்­க­ளாக பலாலி வானூர்தி நிலைய அபி­வி­ருத்­திப் பணி­கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ ளன. ஓடு­பாதை விரி­வாக்­கம் மற்­றும் தொடர்­பு­டைய வச­தி­களை மேற்­கொள்­வது முத­லா­வது கட்­ டப் பணி­க­ளாக முன்­னெ­டுக்­கப்­ப­டும். 

வானூர்தி நிலை­யம் கணி­ச­மான வானூர்­திப் போக்­கு­வ­ரத்தை ஈர்த்­த­வு­டன், இரண்­டா­வது கட்­ட­ மாக, நிரந்­த­ர­மான முனைய கட்­ட­டங்­கள் கட்­டப்­ப­டும். பலாலி வானூர்தி நிலை­யத்­தின் ஓடு­ பாதை, 3 ஆயி­ரத்து 500 மீற்­றர் நீளம் கொண்­ட­தாக விரி­வு­ப­டுத்­தப்­பட்டு, 

ஏ320, ஏ321 போன்ற பெரிய பய­ணி­கள் வானூர்­தி­கள் தரை­யி­றங்­கக் கூடிய வச­தி­கள் செய்­யப்­ப­ட­ வுள்­ளன.

ஓராண்டு பேச்சு


பலாலி வானூர்தி நிலை­யத்தை பிராந்­திய வானூர்தி நிலை­ய­மா­கத் தர­மு­யர்த்­தும் பேச்சு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் திகதி யாழ்ப்­பா­ணத்­தில் இடம்­பெற்­றது. இலங்­கைக்­கான இந்­தி­யத் தூது­வர் தரன்­ஜித் சிங், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, 

மிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் யாழ்ப்­பாண மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், இரா­ணு­ வத் தள­பதி உள்­ளிட்டோர் இந்­தச் சந்­திப்­பில் பங்­கேற்­றி­ருந்­த­னர். கடந்த ஆண்டு டிசெம்­பர் மாதத்­ துக்­குள் இந்­தி­யா­வுக்­கான வானூர்­திச் சேவையை உட­ன­டி­யாக ஆரம்­பிப்­பது 

என்று இந்­தச் சந்­திப்­பில் முடிவு செய்­யப்­பட்­டி­ருந்­தது. நீண்ட இழு­ப­றி­யின் பின்­னர், தற்­போது வானூர்­திச் சேவையை ஆரம்­பிப்­ப­தற்­கு­ரிய அபி­வி­ருத்­திப் பணி­கள் நாளை ஆரம்­பித்து வைக்­கப்­ ப­ட­வுள்­ளன.