உலகக்கோப்பையில் அதிக விக்கெட்: நியூசிலாந்து பவுலர்களில் முதல் இடம் பிடித்தார் டிரென்ட் போல்ட்

ஆசிரியர் - Admin
உலகக்கோப்பையில் அதிக விக்கெட்: நியூசிலாந்து பவுலர்களில் முதல் இடம் பிடித்தார் டிரென்ட் போல்ட்

இங்கிலாந்து - நியூசிலாந்து இடையிலான ஆட்டம் செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் 10 ஓவரில் 56 ரன்கள் விட்டுக்கொடுத்து ஜோஸ் பட்லர், ஜோ ரூட் ஆகியோரை வீழ்த்தினார்.

இந்த இரண்டு விக்கெட்டுக்கள் மூலம் போல்ட் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் 37 விக்கெட்டுக்கள் கைப்பற்றி, அதிக விக்கெட் வீழ்த்திய நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

இதற்கு முன் ஜேக்கப் ஓரம் 36 மற்றும் டேனியல் வெட்டோரி ஆகியோர் தலா 36 விக்கெட்டுக்களும், டிம் சவுத்தி 34 விக்கெட்டுக்களும், கிறிஸ் ஹாரிஸ் 32 விக்கெட்டுக்களும் வீழ்த்தியிருந்தனர்.

Radio
×