கோதபாயவின் சுகம் விசாரிக்க சிங்கப்பூர் சென்ற பொதுஜன பெரமுன குழு

ஆசிரியர் - Admin
கோதபாயவின் சுகம் விசாரிக்க சிங்கப்பூர் சென்ற பொதுஜன பெரமுன குழு

பொதுஜன பெரமுனவை  பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் குழுவொன்று சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவின் நலன் விசாரிக்க   சிங்கப்பூர் வைத்தியசாலைக்கு  விஜயம் செய்துள்ளார்கள்  என பொதுஜன பெரமுன காரியாலயம் அறிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க, தேனுக விதானகே,  பியங்கர  ஜயரத்ன, இந்திக அனுருத்த, மற்றும் கெஹலிய ரம்புக்வெல  ஆகியோரே  நேற்று  இவ்வாறு    சென்றுள்ளார்கள்.

தற்போது  உடல்நிலை  சீரடைந்து வருவதாகவும், விரைவில்  நாடு திரும்பி  நாட்டு மக்களின் அரசியல் எதிர்பார்ப்பினை நிறைவேற்றுவதாகவும், தற்போது காணப்படுகின்ற தடைகளை  எதிர்க் கொண்டு எதிர்க்ட்சி  தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவுடன்  அனைத்து சவால்களையும்  முறியடிப்பதாக  முன்னாள்  பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன  இதுவரையில் அனைத்து  பங்காளி கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகவும், கிராமிய மட்டத்தில்  செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்  பாராளுமன்ற  குழுவினர் தெரிவித்துள்ளனர்.  

ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ததன் பின்னர்  கிராமிய மட்டத்தில் இருந்து  பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Radio
×