50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் பயணிகளுக்கான கேபிள் காா் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்..

ஆசிரியர் - Editor I
50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் பயணிகளுக்கான கேபிள் காா் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்..

நானுஓயாவிலிருந்து சிங்கிள் டீ கந்த ஊடாக, நுவரெலியா கிரெகரி வாவி வரை கேபிள் கார் வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது,
அமைச்சர் நவீன் திசாநாயக்க முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

Outdoor Engineering Lanka (Pvt) Ltd, .தன் வெளிநாட்டு பங்குதாரரரான Doppelme Cable Car Company ஆகிய நிறுவனங்கள் இந்த வேலைத்திட்டத்துக்கான யோசனையை முன்வைத்திருந்தது,

இந்த வேலைத்திட்டத்துக்காக, 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளதாகவும் நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து 21 தூண்களைக் கொண்டு அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் 

ஒரே நேரத்தில் 10 பயணிகள் பயணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நானுஓயாவிலிருந்து நுவரெலியா கிரெகரி வாவி வரை சாலை வழியாக சுமார் 10 கிலோமீட்டர் உள்ளது குறிப்பிடத்தக்கது

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு