தூக்கத்தை தடுக்கும் 4 உணவு வகைகள்..!

ஆசிரியர் - Admin
தூக்கத்தை தடுக்கும் 4 உணவு வகைகள்..!

இரவில் இறைச்சி, எண்ணெயில் பொரித்த உணவுகள், ஐஸ்கிரீம் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அவை செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதால், தூக்கத்தை கெடுக்கும்.

ஒரு நாளைக்கு 6 முதல் 8 மணி நேரம் வரை கண்டிப்பாக தூங்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், பெரும்பாலானோர் மிகக் குறைந்த நேரமே தூங்குகின்றனர். சிலர், பெட்ரூம் சென்று படுத்தப்பிறகும், தூக்கம் வராமல் தவிப்பதை நாம் பார்த்திருப்போம். இதற்கு நாம் உண்ணும் உணவுக்கூட மிக முக்கிய காரணமாக இருக்கலாம். இரவில் தூங்கும் போது பக்கத்தில் தண்ணீர் வைத்திருப்பதை சிலர் வழக்கமாக கொண்டிருப்பர். இரவில் விழிப்பு வந்ததும் சிறுநீர் கழித்துவிட்டு தண்ணீர் குடித்துவிட்டு தூங்கினால், ஆழ்ந்த தூக்கத்திற்கு இடையூறை ஏற்படுத்தும். இதுபோல், என்னென்ன விஷயங்களால் தூக்கம் தடைபடுகிறது என்று பார்ப்போம்.

1. இரவு நேரங்களில் எப்போதும் பழங்கள் அல்லது விரைவாக செரிமானமாகக்கூடிய உணவுகளையே உண்ண வேண்டும். பொதுவாக, ரசாயனங்கள் கலந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால், அதிலிருக்கும் அமிலத்தன்மை நெஞ்செரிச்சல், அஜீரண கோளாறு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். இதனால், தூக்கம் வராமல் அவதிப்படவேண்டும்.

2. இரவு நேரங்களில் சாக்லேட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதில் உள்ள காபைன், ஆழ்ந்த தூக்கத்தை தடுத்துவிடும். மேலும், சர்க்கரை கலந்த உணவுகளையும் இரவில் தவிர்க்க வேண்டும். அவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையை உறிஞ்சி தூக்கத்திற்கு முட்டுக்கட்டை போடும்.

3. அதே போல், இரவு நேரத்தில் காரமான உணவுகள் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். இரவில் கார உணவுகளை சாப்பிட்டால் அது உடல் வெப்பநிலையை அதிகப்படுத்திவிடும். இதனால், ஆழ்ந்த தூக்கத்திற்கு உடல் ஒத்துழைக்காது.

4. இரவில் இறைச்சி, எண்ணெயில் பொரித்த உணவுகள், ஐஸ்கிரீம் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அவை செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதால், தூக்கத்தை கெடுக்கும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு