காலை எழுந்தவுடன் இந்த ஐந்தை செய்தால் எல்லா நாளும் இனிய நாளே..!

ஆசிரியர் - Admin
காலை எழுந்தவுடன் இந்த ஐந்தை செய்தால் எல்லா நாளும் இனிய நாளே..!

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக செல்போனை ஃப்ளைட் மோடில் வைத்துவிடுங்கள். சிலர் காலை எழுந்ததும் இணையத்தில் பிசியாகிவிடுவார்கள். அது காலைப்பொழுதை முற்றிலும் கெடுத்துவிடும்.

காலை எழுந்ததும் சுறுசுறுப்பாக இருப்பது அன்றைய பொழுதை உற்சாகமாக நிறைவடைய வைக்கும். அது பலருக்குத் தெரிந்திருந்தாலும் காலை எழுவது என்பது சற்று சோம்பேறித்தனமாக இருக்கும். இருப்பினும் சுய இலக்குடன் நீங்கள் தொடர்ந்து ஒரு வாரம் செய்தால் போதும் காலை விடியலின் அழகு அத்தனை உற்சாகத்தை அளிக்கும். 

பின் நீங்களே நினைத்தாலும் தூங்க மாட்டீர்கள். காலையில் எழுவதோட மட்டுமல்லாமல், கீழ்கண்ட விஷயங்களை பின்பற்றினால் எல்லா நாளும் இனிய நாளாகும். 

2.செல்போனை தொடாதீர்கள்:


காலையில் எழுந்ததும் முதல் வேலையாக செல்போனை  ஃப்ளைட் மோடில் வைத்துவிடுங்கள். சிலர் காலை எழுந்ததும் இணையத்தில் பிசியாகிவிடுவார்கள். அது காலைப்பொழுதை முற்றிலும் கெடுத்துவிடும். அதனால் போனைத் தவிர்ப்பது நல்லது.

2. உடற்பயிற்சி செய்யுங்கள்:


குறைந்தது 15 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள். சுறுசுறுப்பிற்கான அடித்தளமே உடற்பயிற்சிதான். குறைந்தது ஸ்ட்ரெச்சஸுகளையாவது செய்யுங்கள். அது உடல் தசைகளை இலகுவாக்கி ஃபீல் ஃபிரியாக உணர வைக்கும்.

3. வாசியுங்கள்:


காலை எழுந்ததும் முகம் கழுவி பல் துலக்கிய பின் புத்தகம் வாசிப்பது, செய்தித்தாள் ( கிரைம், வன்முறை போன்ற செய்திகளைத் தவிர்க்கவும் ) , மேகசீன்கள் படிப்பது போன்ற பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். தகவல்களைத் தெரிந்து கொள்ள உதவுவதுடன், உங்களுக்கும் போதுமான ஓய்வாக இருக்கும். மனம் அமைதியடையும்.

4. தேநீர் அருந்துங்கள்:


உடற்பயிற்சிக்குப்பின் ஆற்றலை அதிகரிக்க, தண்ணீரில் எலுமிச்சை சாறு பிழிந்து அருந்துங்கள். இல்லையெனில் கிரீன் டீ, லெமென் டீ அருந்துங்கள். இது உங்களைப் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.

5.திட்டமிடுங்கள்:


அன்றைய நாள் என்ன செய்யப் போகிறீர்கள், என்ன சமையல், யாரைச் சந்திக்கப் போகிறீர்கள், அலுவலக மீட்டிங் இருந்தால் அது குறித்த குறிப்புகளை எடுத்துக் கொள்வது, என்ன உடை உடுத்துவது என்பன போன்ற விஷயங்களைத் திட்டமிடுங்கள். பின் அதன்படி அன்றைய நாளை நிறைவாக்குங்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு