யாழ் பல்கலை முகாமைத்துவ உதவியாளர் வெற்றிடங்கள் சுற்றறிக்கையின் பிரகாரமா நிரப்பப்படுகின்றன.– நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

ஆசிரியர் - Admin
யாழ் பல்கலை முகாமைத்துவ உதவியாளர் வெற்றிடங்கள் சுற்றறிக்கையின் பிரகாரமா நிரப்பப்படுகின்றன.– நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

யாழ் பல்கலைக் கழகத்தில் முகாமைத்துவ உதவியாளர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழுவினால் குறிப்பிட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்களினதும், அமைச்சர்களினதும் சிபார்சினால் வழங்கப்பட்ட பெயர்ப் பட்டியல்கள் யாழ் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அப்பெயர்ப் பட்டியலிலுள்ளவர்களை மட்டும் யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் பரீட்சைக்குட்படுத்தப்பட்டு நேர்முகத் தெரிவுக்கான ஆயத்தங்கள் நடைபெறுவதாகவும் அறிகின்றோம்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆiணக்குழுவின் முகாமைத்துவ உதவியாளர்களை பல்கலைக்கழகங்களில் உள்வாங்குவது தொடர்பான 2018.07.16ஆந் திகதியிலான சுற்றறிக்கை இல: 06ஃ2018இன் படி பின்வரும் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது:

முகாமைத்துவ உதவியாளர் தரம் III

திறந்த அடிப்படையில் 70மூ எனவும் மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் 30மூ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், திறந்த அடிப்படையில் தெரிவு செய்யப்படுபவர்கள் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைக்கமைவாக எழுத்துப் பரீட்சையில் 75மூ புள்ளிகள் மற்றும் நேர்முகப் பரீட்சையில் 25மூ புள்ளிகள் வழங்கப்படுவதன் மூலம் தெரிவு செய்யப்படுவார்கள்.

யாழ்பல்கலைக்கழகத்திற்கு முகாமைத்துவ உதவியாளர்கள் மற்றும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு குறிப்பிடப்பட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்களினதும், அமைச்சர்களினதும் சிபார்சின் அடிப்படையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆiணக்குழுவினால் வழங்கப்பட்ட பெயர்ப் பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமா எழுத்துப் பரீட்சைக்கும் நேர்முகப்பரீட்சைக்கும் உட்படுத்தப்படுகின்றனர்?

அவ்வாறான முறைமையை யாழ் பல்கலைக்கழகம் நடைமுறைப்படுத்துகின்றதாயின், அது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 2018.07.16ஆந் திகதியிலான் சுற்றறிக்கை இல: 06ஃ2018ற்கு முரணானது என்பதனை கௌரவ அமைச்சர் ஏற்றுக் கொள்வாரா?

பிழையான நடைமுறை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்றால் அதனைத் சீர்செய்வதற்கு அமைச்சர் அவர்கள் எடுக்கவுள்ள நடவடிக்கை என்ன?

அவ்வாறான ஓர் நடவடிக்கை பின்பற்றப்படுகின்றதாயின்; அது வேலைவாய்ப்பில்  சகலருக்கும் சமமான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படைக் கோட்பாட்டுக்கு முரணhனது என்பதனை கௌரவ அமைச்சர் அவர்கள் ஏற்றுக்கொள்வாரா?

மேற்படி எனது கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் லக்கி ஜெயவர்த்தன  அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன்

நாடாளுமன்றில் நடைபெற்ற 27/2 கேள்வி நேரத்தின்போது நகர திட்டமிடல், நீர்வளங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் கௌரவ லக்கி ஜெயவர்த்தன  அவர்களிடமே இவ்வாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Radio
×