பொலிஸ்மா அதிபரும் வைத்தியசாலையில் அனுமதியாம்..! தமிழ் சினிமா தோத்திடும்..
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவேண்டிய நிலையில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளா் இன்று காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை தொடா்ந்து பொலிஸ்மா அதிபரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாா்.
தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான வாக்கு மூலம் வழங்க அவர் இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்ட நிலையிலேயே உடல் நல பாதிப்பினால் இவ்வாறு அவர் வைத்தியசலையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.இதேவேவேளை, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவும்
இன்று காலை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.