வடக்கின் பல பாகங்களில் இன்று வெள்ளிக்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

ஆசிரியர் - Admin
வடக்கின் பல பாகங்களில் இன்று வெள்ளிக்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று காலை 8.30 மணியிலிருந்து மாலை 05.30  மணி வரை, மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்.பிரதேசத்தில்: 

இன்று காலை 08.30 மணி முதல் பிற்பகல் 05.00 மணி வரை யாழ். காங்கேசன்துறை, காங்கேசன்துறை கரிசன் 5 ஆவது பொறியயல் படை முகாம், காங்கேசன்துறை வடக்கு கடற்படை முகாம், மயிலிட்டி, மயிலிட்டி கரிசன் 5 ஆவது பொறியியல் படை முகாம், மயிலிட்டி கரிசன் 5 ஆவது பொறியியல் படை முகாம் (புதியது), தையிட்டி, வறுத்தலை விளான், வீமன்காமம், பலாலி, பலாலி இலங்கை விமானப்படை முகாம், பலாலி விமானப்படை ஓய்வுகால விடுதி ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு