பிரித்தானியாவில் போர் வானூர்தி பாதுகாப்புடன் தரையிறக்கப்பட்ட ஏயர் இந்தியன் வானூர்தி!
மும்பையில் இருந்து அமெரிக்காவின் நெவார்க் நகருக்கு சென்று கொண்டிருந்தது ஏர் இந்திய பயணிகள் வானூர்தியில் வெடிகுண்டு உள்ளதாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து
பிரித்தானியவின் லண்டன் வானூர்தி நிலையத்தில் பிரித்தானிய இராணுவ வானூர்தி படையணியின் சிறப்பு பாதுகாப்போடு அவசரமாக தரையிறக்கப்பட்டது.
உடனடியாக பயணிகள் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு செயலிழக்கும் படையணி மோப்ப நாய் படையணிகள் வரவழைக்கப்பட்டு பயணிகள் உட்பட வானூர்தி கடும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது.
6 மணிநேர சோதனைகளின் பின் தற்போதைய நிலவரப்படி விமானத்தில் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் படியான எந்த பொருளும் கண்டுபிடிக்கவில்லை என பிரித்தானிய பாதுகாப்பு பிரிவு தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
போயிங்777 வகைபிரிவைச் சேர்ந்த இந்த ஏர் இந்திய பயணிகள் வானூர்தியில் 400 பயணிகள்இருந்தமை குறிப்பிடத்தக்கது.