ஆரோக்கியமான விந்தணுக்களுக்கு சீக்கிரம் தூங்க வேண்டும்..! - ஆய்வில் கண்டுபிடிப்பு

ஆசிரியர் - Admin
ஆரோக்கியமான விந்தணுக்களுக்கு சீக்கிரம் தூங்க வேண்டும்..! - ஆய்வில் கண்டுபிடிப்பு

தினமும் 11 அல்லது 11.30 மணிக்குமேல் தூங்கச் செல்லும் ஆண்களுக்கு குறைவான மற்றும் ஆரோக்கியமற்ற விந்தணுக்கள் உற்பத்தியாகிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

டென்மார்க்கில் உள்ள ஆரஸ் பல்கலைக்கழகம் இரவில் தாமதமாக மற்றும் சீக்கிரமாக தூங்கும் ஆண்களை பற்றி ஆய்வு செய்துள்ளது. ஆரஸ் பல்கலைக்கழகம் இந்த ஆய்வில் 100 ஆண்களை உட்படுத்தியது. அதில் குழந்தை பெற்றுக் கொள்வதில் சிக்கல் உள்ள ஆண்களுக்கு டென்மார்க் கருத்தரித்தல் கிளினிக் சிகிச்சை அளித்துள்ளது. 

அவர்களை 10.30 மணிக்கே படுக்கச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அதைப் பின்பற்றிய ஆண்களுக்கு நான்கு மடங்கு ஆரோக்கியமான மற்றும் சரியான முறையில் விந்தணுக்கள் உற்பத்தியாகியுள்ளன. குழந்தையும் உருவாகியுள்ளது.


அதேபோல் தினமும் 11 அல்லது 11.30 மணிக்கு மேல் தூங்கச் செல்லும் ஆண்களுக்குக் குறைவான மற்றும் ஆரோக்கியமற்ற விந்தணுக்கள் உற்பத்தியாகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. அவை குழந்தை உருவாவதற்கான தகுதியற்ற விந்தணுக்கள் என்கிறது அந்த ஆய்வு. 


இது குறித்து பேசிய ஆரஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஹான்ஸ் ஜாகொப், “ஆண்கள் சீக்கிரம் தூங்கி விழிக்க வேண்டும். அதை வழக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும். ஆண்களுக்கு ஆழ்ந்த தூக்கம், அதிகமான தூக்க நேரம் கிடைத்தால் அவர்களின் விந்தணுக்கள் ஆரோக்கியமாக இருக்கும்.


மேலும் அதில் இரவில் படம் பார்ப்பது, அலுவலக வேலைகளைச் செய்வது, செல்ஃபோன் பயன்படுத்துவது என்று இரவு 11 மணிக்கு மேல் வரை பயன்படுத்தியபின் தாமதமாகத் தூங்கி தாமதமாக விழிப்பது ஆரோக்கியமல்ல” என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு