வழுக்கை விழாமல் தடுக்க சாப்பிட வேண்டிய 5 பழங்கள்..!

ஆசிரியர் - Admin
வழுக்கை விழாமல் தடுக்க சாப்பிட வேண்டிய 5 பழங்கள்..!

பெரும்பாலும் தலை முடி வேர்கள் வறட்சி அடைந்தாலும் முடி உதிர்தல் பிரச்னை வரும். இதற்கு பீச் பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, சி ஆகியவை சரியான தீர்வு. அவை இரண்டும் ஈரப்பதத்தை அள்ளி வழங்கும் ஆற்றல் கொண்டவை.

வழுக்கை, முடி உதிர்வு என்பது பலருக்கும் பிரச்சனையாக மாறியுள்ளது. இதற்கு பல்வேறு தீர்வுகள் வழங்கப்படுகிறது. ஆனால், முடி உதிர்வது நின்றபாடில்லை. இந்நிலையில், மரபணு ரீதியாக, உடல் நலன் குறைவு, மனப் பிரச்சனைகள், முடி வேர்களின் சிதைவு ஆகியவற்றின் காரணமாக ஒருவருக்கு வழுக்கை ஏற்படுவதாக லண்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பஷீர் கூறுகிறார். 

தலைமுடியின் மேலே நல்ல ஷாம்புக்கள், இயற்கையாக தயாரிக்கப்படும் பவுடர்களை பயன்படுத்துவதைவிட முடி வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஊட்டச்சத்து நிறைந்த பழங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் வழுக்கையை தடுக்கலாம் என்கிறார் பஷீர். அந்தவகையில் சில பழங்களையும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

1.அன்னாசி பழம் : 


சுற்றுச்சூழல் மாசுபாட்டால் முகம் மட்டுமல்ல தலை முடி வேர்களும் பாதிக்கப்படும். குறிப்பாக இளைஞர்கள் அதிகமாக இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுவார்கள். அதற்கு அன்னாசி பழத்தில் உள்ள வைட்டமின் சி, மெக்னீசியம், வைட்டமின் பி6 ஆகியவை மட்டுமன்றி அதில் இருக்கும் ஃப்ளேவனாய்ட்ஸ், ஃபினோலிக் ஆசிட் என்று சொல்லக் கூடிய ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் இருப்பது வேர் செல்களின் பாதிப்புளை பழுது பார்த்து முடி வளர்ச்சியைத் தூண்டும்.

2.பீச் பழம் : 


பெரும்பாலும் தலை முடி வேர்கள் வறட்சி அடைந்தாலும் முடி உதிர்தல் பிரச்னை வரும். இதற்கு பீச் பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, சி ஆகியவை சரியான தீர்வு. அவை இரண்டும் ஈரப்பதத்தை அள்ளி வழங்கும் ஆற்றல் கொண்டவை. இதை ஜூஸாக குடித்ததாலும், அரைத்து வேர்களில் தடவியதாலும் முடி வளர்ச்சி அதிகரித்த தரவுகளும் உள்ளன என்கிறார் ஆராய்ச்சியாளர்.

3.ஆப்பிள் : 


ஆப்பிள், தலையின் வேர்களில் புதிய முடிகள் வளர உதவும் என ஜப்பானில் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மேலும் இதில் உள்ள வைட்டமின் ஏ , பி , சி ஆகியவை பொடுகுத் தொல்லைகளிலிருந்து தீர்வுக்கு வழிவகுக்கும். ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ், கெட்ட செல்களை நீக்கி தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும்.

4.கிவி பழம் : 


தலை முடி ஆரோக்கியமாக வளர இரத்த ஓட்டம் வேர்களுக்கு சீராகப் பாய வேண்டும். கிவி பழத்தில் வைட்டமின் ஏ, சி , இ மற்றும் கே ஆகியவை நிறைந்துள்ளன. அதுமட்டுமன்றி ஸிங்க், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் ஒமேகா 3,  ஃபேட்டி ஆசிட் இருக்கின்றன. இவை தலை முடி வளர்ச்சிக்கு மட்டுமல்ல கருகரு கூந்தலுக்கும் உத்திரவாதம் அளிக்கும்.

5.பப்பாளி : 


ஒவ்வொரு முடிக்குமான ஊட்டச்சத்துகளை சீராக கொண்டு சேர்க்கும் வல்லமை பப்பாளியில் இருக்கிறது. இது புதிய முடி உருவாக்கத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும் ஒரு முழு பப்பாளியில் 235 மில்லி கிராம் வைட்டமின் சி இருப்பதாகவும் அது முடி வளர்ச்சி பெரும் பங்கு வகிக்கிறது என்றும் குறிப்பிடுகிறார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு