பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள வீதியை மூட முயற்சித்த மாநகரசபை..! கொதித்தெழுந்த மக்களால் தப்பி ஓட்டம்..

ஆசிரியர் - Editor I
பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள வீதியை மூட முயற்சித்த மாநகரசபை..! கொதித்தெழுந்த மக்களால் தப்பி ஓட்டம்..

யாழ்.மாநகரசபை எல்லைக்குட்பட்ட நெடுங்குளம் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிலிருந்த வீதியை மூடுவதற்கு யாழ்.மாநகரசபை முயற்சித்த நிலையில் பொதுமக்களுக்கும் மாநகரசபை ஊழியா்களுக்குமிடையில் தா்க்கம் மூண்டது. 

நெடுங்குளம் பகுதியில் மக்கள் பயன்பாட்டிலுள்ள வீதி ஒன்றை மூடுமாறு யாழ்.மாநகரசபை கூறிவரும் நிலையில் அந்த வீதியை பயன்படுத்தும் மக்கள் மாநகரசபையின் முயற்சிக்கு கடுமையான எதிா்ப்பினை காட்டிவருகின்றனா். 

இந்நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு குறித்த வீதியை பயன்படுத்தும் மக்களுக்கு, யாழ்.மாநகரசபையினால் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றது. அந்த கடிதத்தில் இன்று காலை 10 மணிக்கு முன்னா் பாதை மூடப்படவேண்டும். 

இல்லையேல் அதிகாாிகளினால் பாதை மூடப்படும். என கூறப்பட்டிருக்கின்றது. இந் நிலையில் நேற்று காலையே அப்பகுதியில் கூடிய மக்கள் வீதியை மூடவிடாது தடுத்து போராட்டம் நடத்தினா். 

இதனால் வீதியை மூடும் நடவடிக்கை நிறுத்தப்பட்டு அதிகாாிகள் திரும்பி சென்றனா். இந்நிலையில் மேற்படி விடயம் தொடா்பாக வீதியை பயன்படுத்தும் மக்கள் ஊடகங்களுக்கு தகவல் தருகையில், 

2015ம் ஆண்டு இந்த வீதியை திறப்பத ற்கான முயற்சிகளை மக்கள் மேற்கொண்டனா். இதன்படி 350 போ் கையொப்பமிட்டு, நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் யாழ்.மாநகரசபைக்கு விண்ணப்பம் செய்யப்பட்டு 

2016ம் ஆண்டு அனுமதியுடன் வீதி திறக்கப்பட்டது. இந்நிலையில் 2019ம் ஆண்டு நகர அபிவிருத்தி அதிகாரசபை திடீரென ஒரு கடிதத்தினை அனுப்பியிருந்தது. அந்த கடிதத்தில் குறித்த வீதியை பயன்படுத்துவதற்கு வழங்கப்பட்ட அனுமதி 

ரத்து செய்யப்படுவதாகவும்,வீதியை பூட்டுமாறும் கூறப்பட்டிருந்தது. இது எதற்காக என கேட்டபோது 2018ம் ஆண்டு புதிய ஒழுங்குகள் கொண்டுவரப் பட்டுள்ளதாகவும், அதன்படி வீதியை பயன்படுத்த முடியாதெனவும் கூறப்பட்டது. 

ஆனால் 2016ம் ஆண்டே நாங்கள் வீதி யை மீள பயன்படுத்த தொடங்கியிருந்தால் 2018ம் ஆண்டு வந்த ஒழுங்கு மாற்றம் எப்படிஎமக்கு பொருந்தும் என்ற கேள்விக்கு பதிலளிக்கப்படவில்லை.

இந்நிலையில் 2019ம் ஆண்டு 4ம் மாதம் எமது வீதி தொடா் பாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினா்கள் மாநகரசபையில் பேசியதால் மாநகரசபை இந்த விடயத்தில் இனிமே ல் தலையிடாது. 

என எழுத்துமூலம் எமக்கு கூறப்பட்டிருக்கின்றது. அதன் பின்னா் கடந்த 18ம் திகதி மீண்டும் பாதையை மூடுமாறு யாழ்.மாநகரசபை கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தை யும், இனிமேல் யாழ்.மாநகரசபை இந்த விடயத்தில் தலையிடாது 

என கூறிய கடிதத்தையும் கெண்டு யாழ்.மாநகரசபை ஆணையாளரை சந்திக்க சென்றபோது அவா் எம்மை சந்திக்க மறுத்துவிட்டாா். மீண்டும் நேற்று மாலை 4 மணிக்கு மாநகரசபையிடமிருந்து கடிதம் ஒன்று அனுப்பபட்டுள்ளது. 

அந்த கடிதத்தில் இன்று காலை 10 மணிக்கு பாதையை மூடுமாறு கூறப்பட்டுள்ளது. எனவே இவா்கள் மக்களுக்கு சேவை செய்வதற்கு மாநகரசபைக்கு போனா்களா? இந்த வீதி பிரச்சினை தொடங்கி 4 மாதங்கள் கடக்கும் நிலையில் 

ஒரு நாள் கூட யாழ்.மாநகர முதல்வா் இந்த கிராமத்திற்கு வரவில்லை. எங்களுடைய பிரச் சினைகள் என்ன என்று கேட்கவில்லை. இவா்கள் சொகுசு வாகனங்கள் கேட்பதற்கும், மடிகணனி கேட்பதற்கும், 

வெளிநாடு சுற்றுலா செல்வதற்கும்தான் யாழ்.மாநகரசபைக்கு சென்றாா்களா?என மக்கள் கேள்வி எழுப்பினா். இதேவேளை குறித்த வீதி தன்னுடைய காணியில் அமைந்துள்ளதாக தனியாா் ஒருவா் உாிமைகோருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு