மரண தண்டணை வழங்கும் தீா்மானத்தில் மாற்றம்வேண்டும்..! பிாிட்டன் எச்சாிக்கை..
மரண தண்டணை வழங்கும் தீா்மானத்தில் மாற்றம் உருவாகாவிட்டால் இலங்கையுடனான பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட சட்ட அமுலாக்க நடவடிக்கைளில் பிாிட்டனின் ஒத்துழைப்பு சாத்தியமற்றதாக்கப்படும்.
என பிாிட்டன் இலங்கைக்கு எச்சாிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கு இது தொடர்பில் வழங்கிவந்த தொழில்நுட்ப உதவிகளை மறுபரிசீலனை செய்யவேண்டியிருக்கும் எனவும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.
மரணதண்டனையை நிறைவேற்றுவதில்லை என்ற தனது நீண்ட கால நிலைப்பாட்டை இலங்கை கைவிட எண்ணியுள்ளது என்ற தகவல்களால் நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம் என
பிரிட்டனின் வெளிவிவகார அலுவலகம் தெரிவித்துள்ளது.மரணதண்டனையை நிறைவேற்றுவதை அனைத்து சந்தர்ப்பங்களிலும் பிரிட்டன் எதிர்க்கின்றது எனவும் வெளிவிவகார அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கை தனது நீண்டகால கொள்கையை கைவிடுவது பின்னோக்கி செல்லும் ஒரு நடவடிக்கையாக அமையும் எனவும் தெரிவித்துள்ள பிரிட்டன் இலங்கையின் சர்வதேச கௌரவத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்
எனவும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.